HomeCinemaபயமில்லாமல் துணிச்சலாக ஹீரோவாக நடித்திருக்கிறார்! -வஞ்சி பட விழாவில் படத்தின் இயக்குநர் பற்றி இயக்குநர் பேரரசு...

பயமில்லாமல் துணிச்சலாக ஹீரோவாக நடித்திருக்கிறார்! -வஞ்சி பட விழாவில் படத்தின் இயக்குநர் பற்றி இயக்குநர் பேரரசு பாராட்டு

Published on

சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி.’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி, மாலை சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பேரரசு, இசையமைப்பாலர் தினா, நடிகர் கூல் சுரேஷ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் இசக்கி ராஜா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரளி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் இயக்குநர் சி.ஆர்.ராஜேஷ் பேசுகையில், “இரண்டு வருடங்களாக கஷ்ட்டப்பட்டு இந்த படத்தை எடுத்தேன். கேரளாவில் முக்கியமான லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான மாஸ்டர் ராஜநாயகம் பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என சிங்க குரலில், சிங்கார தமிழ் நடையில் துள்ளி குதித்து வரும் அருவி நீராய், பள்ளி குழந்தை முதல் பக்கு இடிக்கும் கிழவி வரை, சொல்லி மாலாது உன் திரைப்பணி. தீனிப்போட்டது நம் இயக்குநர் இமயம். உன் பெயரில் பாரதி இருந்ததால் என்னவோ உன் படங்களில் பெண்களுக்கு வீர உயிர் கொடுத்தாய். படித்தாண்டினாலும் பத்தினி பத்தினி தான் என்ற உன் வசனங்கள், உன் உடல் மண்ணில் புதைக்கும் போது என் கண்கள் குளமாகின. கல்லிப்பாலிலே தூக்கிலிடும் சிசுக்களை பள்ளியிலேயே பாடம் கற்று, பாமரணை மாற்றிய உன் உயரிய சிந்தனை, எண்ணங்கள், உன் இழைப்பை ஆழிப்பேரலை போல் அழ வைத்து சென்று விட்டாய்.

குருவையே மிஞ்சியவன் சிஷ்யன், பத்து முறை பார்த்தாலும் மறுமுறை பார்க்க வேண்டும் என்று கதையில் சூனியம் வைத்து தமிழ் மக்களை கட்டிப்போட்டவன் பாக்கியவான் பாக்யராஜ், பெண்ணியத்தை கண்ணியமாக காட்டி, பெண் நினைத்தால் மலையையும் மைல்கல்லாய் மாற்றுவார் என்று உன் படைப்புகள் தான் எங்களின் பாடங்கள். இந்த இரண்டு ராஜாக்களும் திரையில் இருந்தும், இந்த உலகில் இருந்து ஓய்வு எடுக்க சென்று விட்டீர், என் மக்களை நிலைகுனிய வைத்து விட்டீர். உங்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். உங்கள் வழியிலேயே ஒரு வீர மகளின் வாழ்க்கையை படம் பிடித்த ராஜேஷ் இயக்குநரை பாராட்ட வார்த்தை இல்லை.

வஞ்சி மகளின் இரத்த நானங்களை இசை நாதங்களாக வழி வகுத்த இசையமைழகன் சதிஷ் சங்கர், உங்கள் ராகங்களே வஞ்சியின் கீதங்கள். வஞ்சியின் இளவரசி காந்தகண் பேரழகி ஷாமல், உன் நடிப்பு வஞ்சியின் வெற்றிக்கு சமர்ப்பணம். மூன்று திரைப்படங்கள் எடுத்தாலும், வெற்றி கிட்டும் வரை விடமாட்டேன், என்று விடாமல் படம் எடுக்கும் விலமாஇந்த திரைப்படம் தொடர்ந்து வெற்றி பெறும் உன்னுடைய நிழலா, நன்றி வணக்கம்.” என்று கவிதை நடையில் பேசினார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “’மக்கள் தலைவன்’ இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சார் கலந்து கொண்டார். அது தான் அவர் பங்கேற்ற கடைசி திரை நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதில் நானும் கலந்து கொண்டேன். அதன் பிறகு நடக்கும் இசை வெளியீட்டு விழா ‘வஞ்சி’, அவரை நினைவுப்படுத்துகிறது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பெரும் கலைஞர்கள் இழப்பு பாரமாகவே ஓடிக்கிட்டு இருக்கு. பாரதிராஜா, பாக்யராஜ் பெயர் இல்லை, வரலாறு. அவர்களை பற்றி ராஜநாயகம் கவிதை வாசித்தார். அந்த இரண்டு பேரையும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. பாராதிராஜா என்ற ஒரு இயக்குநர் வெற்றியடைவில்லை என்றால், கிராமத்தில் இருந்து வந்தவர்களால் இங்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. நிறைய இயக்குநர்கள் அவரைப் பார்த்து தான் இங்கு வந்து வெற்றி பெற்றார்கள். பாக்யராஜ் சார் படங்களை பார்க்கும் போது தான், நம்மாளும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

நம்முடைய முதல்வர் விஜய், அவர்களுக்கு ஒரு கோரிக்கை, சிறந்த இயக்குநர் விருது வழங்கும் போது அதை பாரதிராஜா சார் பெயரிலும், சிறந்த கதையாசிரியர் விருது கே.பாக்யராஜ் சார் பெயரில் வழங்க வேண்டும். இது தான் அவர்களுக்கு நாங்கள் காட்டும் நன்றி கடனாக இருக்கும்.

நம்ம இசக்கி ராஜா, அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டார். எந்த தொழிலாக இருந்தாலும், வியாபாரத்தையும், லாபத்தை நோக்கி தான் பயணிக்கும். சினிமாவும் ஒரு தொழில் தான், ஆனால் இங்க மட்டும் வியாபாரத்தை நோக்கி இல்லை, லாபத்தை நோக்கி இல்லை. அதனுடைய வெளிப்பாடாக தான் அவர் பேசினார். இங்கு தீர்வு வர வேண்டும். சிறு சிறு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள், சாப்பாடு போடுகிறார்கள், பிறகு அவர்கள் சென்று விடுகிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இருந்தால் குறைந்தது 5 படங்கள் பண்ண வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இங்கு வர வேண்டும்.

சிறு சிறு தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் சிறு சிறு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர் விமலா மேடமுக்கு நன்றி. ராஜநாயகம் சார், இசையமைப்பாளர், பாடலாசிரியரை கேரளாவில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டும் வேறு மாநிலத்தவர் என்று பார்ப்பதில்லை, அனைவரையும் கலைஞர்களாகத்தான் பார்ப்பார்கள். அதனால் தான் ராஜநாயகம் சார் மொழியை பார்க்காமல் கதையை பார்த்திருக்கிறார். இயக்குநர் ராஜேஷின் துணிச்சலை பாராட்ட வேண்டும். எனக்கும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு பயம். நல்ல போயிட்டு இருக்கு, இயக்குநர் தான் நம்ம வேலை, அதை விட்டுவிட்டு எப்படி, என்று யோசித்து பயந்தேன். அதனால் வேண்டாம் என்று விட்டுட்டேன். ஆனால், ராஜேஷ் அந்த பயம் இல்லாமல் துணிச்சலாக ஹீரோவாக நடித்திருக்கிறார். அதற்கு காரணம் கதை. தன் கதையின் மீது இருக்கும் நம்பிக்கை. இந்த கதையில் யார் நடித்தாலும் ஹிட்டாகும் போது, ஏன் நாம் நடிக்க கூடாது. என்ற தைரியம், அந்த தைரியத்தை பாராட்டுகிறேன்.

பெண் பிள்ளையை பெற்றவர்கள் பெருமைப்பட வேண்டும். பெண்கள் தைரியம் மிக்கவர்கள் என்பதை சொல்வது தான் வஞ்சி. பெற்றவர்கள் தான் அப்பா இல்லை. யார் பெண் மீது அக்கறை காட்டுகிறார்களோ அவர்கள் தான் அப்பா, என்ற கருத்தை சொல்வது தான் வஞ்சி கதை. பாடலாசிரியர் தமிழ் பிடித்ததால் தமிழ் பாடல் எழுதியிருக்கிறேன், என்று சொன்னார். தமிழ் யாருக்கெல்லாம் பிடிக்கிறதோ, அவர்களை எங்களுக்கு பிடிக்கும். படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள். விமலா ராஜநாயகம் அவர்கள் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.

Latest articles

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான...

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ படத்தின் முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...

ஜென்-ஸி தலைமுறை உலகை பிரதிபலிக்கும் விதமாக சீயோன் ராஜா இயக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ்...

ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ‘குறிஞ்சி மலை மேல’ 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான சிட்டுக்குறிஞ்சி படத்தின் முதல் பாடலான குறிஞ்சி மலை...

More like this

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான...

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ படத்தின் முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...

ஜென்-ஸி தலைமுறை உலகை பிரதிபலிக்கும் விதமாக சீயோன் ராஜா இயக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ்...