HomeGeneralஇது அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்! -இதயம் முரளி பட விழாவில் இயக்குநர் அட்லீ

இது அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்! -இதயம் முரளி பட விழாவில் இயக்குநர் அட்லீ

Published on

அதர்வா முரளி நடித்துள்ள, இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் அதர்வா பேசியதாவது: முதலில் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தப் படத்தின் பயணம் முழுவதும் நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் பயணம் மிகவும் அழகாக அமைந்தது. இளம் தலைமுறையினரின் ஆற்றலுடன் கூடிய ஒரு அருமையான குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரக்‌ஷன், டிராவிட் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பாடல்கள், நடனங்கள், காட்சியமைப்பு என படத்தின் ஒவ்வொரு அம்சமும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரின் நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. தயாரிப்பாளராக ஆகாஷ் ஏற்கனவே பல படங்களை வழங்கியிருந்தாலும், இயக்குநராக அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் என்பதால் இது அவருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பகத் பாசில், தமன் என சர்ப்ரைஸ் நடிகர் பட்டாளம் படத்தில் உள்ளது அதற்கு காரணம் ஆகாஷ் தான்.

இறுதியாக, இது அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு மனநிறைவு தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘இதயம் முரளி’ ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இயக்குநர் அட்லீ பேசியதாவது: ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பும், நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், எளிமையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் சிறப்பாகப் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல், கயாது மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகையாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர் படத்திற்கு அற்புதமான காட்சியமைப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தத் திரைப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது: ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காதலைக் கொண்டாடும் ஒரு அழகான திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எங்கள் படத்திற்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது.., இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்பாளிக்கான கனவுகளோடு இருந்தார். பொதுவாக சினிமா வட்டாரத்தில், “பணம் இருப்பவர்களால் மட்டுமே படம் எடுக்க முடியும்; அம்பானி போன்றவர்களுக்குத்தான் அது சாத்தியம்” என்று பேசுவோம். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது பணம் மட்டுமல்ல. ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு திட்டத்தை முழுமையாக உருவாக்குவது மிகப் பெரிய சவாலான வேலை.

அந்தப் பயணத்திற்காக ஆகாஷ் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் என்னைச் சந்தித்து, “ஸ்கிரிப்ட்டில் இதைச் சேர்த்திருக்கிறோம், அதை மேம்படுத்தியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பு நிலைக்கு வந்து, இன்று அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அதர்வாவை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது; அதை இங்கே நேரில் பார்க்க முடிகிறது. ப்ரீத்தி, கயாது உள்ளிட்ட அனைத்து நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.
கார்த்திக், தமன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். நானும் தமனும் எங்கள் முதல் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மொத்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் காட்சியமைப்பு, இசை மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட ஒரு திரைப்படம். அதற்கு மேல் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. திரையரங்குகளில் சந்திப்போம். நன்றி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார் பேசியதாவது.., முதலில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் பயணத்தில் நானும் அவருடன் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான அழகிய காதல் திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மக்கள் நிச்சயம் ரசித்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் அதர்வா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இடம்பெற்றுள்ளது. அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் மிகுந்த பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும், மனநிறைவு தரக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.
ஒளிப்பதிவாளர் சாய் பேசியதாவது.., இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இந்தப் பயணத்தைப் பற்றி நாங்கள் சுமார் பத்து ஆண்டுகளாகப் பேசிக் கொண்டே இருந்தோம். கல்லூரி நாட்களிலிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். இன்று அந்தக் கனவு நனவாகி, ஜூலை 10-ஆம் தேதி படம் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஆகாஷ் முதலில் ஒரு இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஆனால் அவர் தயாரித்த திரைப்படம்தான் முதலில் வெளியாகிவிட்டது. அதில் எந்த வருத்தமும் இல்லை. நல்ல விஷயங்கள் நடைபெற சிறிது காலம் எடுக்கும் என்பார்கள். அதுபோல இந்தப் படமும் சரியான நேரத்தில் ரசிகர்களைச் சென்றடைகிறது ‘இதயம் முரளி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் டிராவிட் பேசியதாவது.., முதலில் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யூடியூபில் இருந்த என்னை நம்பி, இந்தக் கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்பு வழங்கியதற்கு அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நடிப்பைத் தாண்டி, ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாகிறது, ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுக வேண்டும் என்பதையும் ஆகாஷ் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நடிகராக மட்டுமல்ல, சினிமாவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்தப் படம் எனக்கு உதவியது.
‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களே பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த நட்பைப் பற்றி மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தில் நண்பர்களாக நாங்கள் நடித்தது இல்லை; இந்தப் படமே எங்களை உண்மையான நண்பர்களாக மாற்றிவிட்டது. இன்றும் நாங்கள் அனைவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, ஒருவருக்கொருவர் என்ன செய்கிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் படம் எங்களை இணைத்துள்ளது.
அதர்வா மிகவும் அன்பான மனிதர். திரையில் எவ்வளவு கவர்ச்சியாகத் தோன்றுகிறாரோ, நிஜ வாழ்க்கையிலும் அதே அளவுக்கு அழகான குணம் கொண்டவர். ப்ரீத்தி முகுந்தன், கயாது உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் சுதாகர் அண்ணாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் அவரை ஒரு புதிய கோணத்தில் இந்தப் படத்தில் பார்க்கப் போகிறார்கள்.
யூடியூபில் இருந்து திரைப்பட உலகிற்கு நான் வந்த பயணத்தில், ‘இதயம் முரளி’ மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷ் பாஸ்கரனுக்கும், படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகை ஏஞ்சலின் பேசியதாவது.., இந்த மேடையில் நிற்பதை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இன்று ‘இதயம் முரளி’ படக்குழுவின் ஒருவராக இந்த மேடையில் நிற்பது மிகவும் பெருமையாக உள்ளது.
ஒரு விஷயத்தை இதுவரை பெரிதாக எங்கும் பகிர்ந்ததில்லை. என் ஊடகப் பயணத்தில் நான் எடுத்த முதல் பிரபலத்தின் நேர்காணல் அதர்வாவுடன்தான். இன்று அவருடனேயே என் முதல் திரைப்படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது.
இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. காரணம், இதில் கிடைத்த நட்புதான். இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் எங்களுக்கு நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் நாங்கள் ஒரு அழகான பிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். பல இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் உருவாகியுள்ளது. குறிப்பாக, திரையில் எங்களுக்குள் இருக்கும் நட்பின் உணர்வு மிகவும் உண்மையாக வெளிப்பட்டிருப்பதை ரசிகர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
என் திரைப்பயணத்தைத் தொடங்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்க முடியாது என்று நான் உணர்கிறேன். இந்தப் படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் உங்களுக்குப் பிடித்த பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடன இயக்குநர் அனுஷா பேசியதாவது: முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
திங்க் மியூசிக்குடன் எனக்கு நல்ல பயணம் அமைந்துள்ளது. ‘கட்சி சேரா’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, ஒரு வாரத்திலேயே நான் ஒப்பந்தமான முதல் திரைப்படம் ‘இதயம் முரளி’. அப்போது நான் யார், என் பணி என்ன என்பது கூட பலருக்குத் தெரியாது. இருந்தாலும் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய Dawn Pictures மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி.  படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சிறப்பான காட்சிகளை உருவாக்கியுள்ளனர். அதர்வா, ப்ரீத்தி, கயாது, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின் உள்ளிட்ட ஒட்டுமொத்த நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் நான் நடன அமைப்பு செய்துள்ளேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து அந்தப் பொறுப்பை வழங்கிய படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என் திரைப்பயணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றி.

Latest articles

உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது! -நடிகர் பாரத்

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று...

இயக்குநர் ஹெச். வினோத், பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்க, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு இயக்கும் ’அல்மோஸ்ட் நல்லவன்’ கிராமத்து மண்வாசனையோடு உருவாகிறது!

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி,...

கால்பந்து விளையாட்டு பின்னணியில் உருவான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ விரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்...

179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு,...

More like this

உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது! -நடிகர் பாரத்

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று...

இயக்குநர் ஹெச். வினோத், பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்க, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு இயக்கும் ’அல்மோஸ்ட் நல்லவன்’ கிராமத்து மண்வாசனையோடு உருவாகிறது!

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி,...

கால்பந்து விளையாட்டு பின்னணியில் உருவான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ விரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்...