HomeMovie Reviewஎங்கள் தங்கம் சினிமா விமர்சனம்

எங்கள் தங்கம் சினிமா விமர்சனம்

Published on

தெலுங்கு ‘மா இன்ட்டி பங்காரம்’ தமிழ் டப்பிங்கில் ‘எங்கள் தங்கம்.’

கதையின் நாயகி ஸ்வர்ணா கணவருடனும், கணவரின் குடும்பத்துடனும் உற்சாகமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரமாகப் பார்த்து நக்சலைட் குழு ஒன்றின் தலைவன் ஸ்வர்ணாவை தன்னுடன் வந்துவிடச் சொல்லி அழைக்கிறான். ஸ்வர்ணா மறுக்க, அவன் ஸ்வர்ணாவின் குடும்பத்தை அழித்து விடுவேன் என்று சொல்லி, அதற்கான முயற்சிகளில் இறங்குகிறான்.

ஸ்வர்ணா அவனிடமிருந்து குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கி ஆக்சன் சூறாவளியாய் மாறுகிறார். அவர்களின் முயற்சியை முறியடிக்கிறார்.

எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமும் பரபரப்பும் கலந்த காட்சிகளாக இருக்க, நக்சல் கும்பலுக்கும் ஸ்வர்ணாவுக்கும் என்ன தொடர்பு என்பது இயக்கியிருக்கும் எங்கள் தங்கத்தின் விறுவிறுப்பான எபிசோடுகள்…

ஸ்வர்ணாவாக சமந்தா. சமையலில் ஆனா ஆவன்னா கூட தெரியாதவர் தோழியை விதவிதமாக சமைக்க வைத்து தானே சமைத்தது போல், மல்ட்டி குசின் ரெஸ்டாரண்ட் செஃப் லெவலுக்கு கணவரின் வீட்டாரிடம் பில்டப் கொடுக்கும் காட்சிகள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதிரிகளை பறந்து பறந்து சுளுக்கெடுக்கும்போதும், துப்பாக்கியால் சம்பவங்கள் செய்கிற போதும் நடிப்பில் வேற லெவல் வெறித்தனம் காட்டி அசரடிக்கிறார்.

நக்சல் கும்பல் தலைவனாக குல்சன் தேவய்யாவின் வில்லத்தனம் போதுமான அளவில் இருக்கிறது. சமந்தாவின் சிநேகிதியாக வருகிற மன்ஜூஷாவுக்கு காமெடி கலகலப்பில் பெரும் பங்கிருக்கிறது. சமந்தாவின்  கணவராக திகந்த் மஞ்சாலே, மாமியாராக கெளதமி உள்ளிட்டோர் கதையின் தேவையை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.

பாடல்களில் எனர்ஜி ஏற்றியிருக்கும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் ஆக்சன் அதிரடிக்கு பொருந்தும்படி பயணித்திருக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் பயங்கரவாதக் குழுவில் இணைந்து களப்பணியாற்றிய ஒரு பெண் அதிலிருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் நுழையும்போது சந்திக்கும் பேராபத்துகளில் காமெடி கலாட்டாக்களை கலந்து கட்டியிருக்கும் நந்தினி ரெட்டி,  படத்தை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.

Rating 3 / 5

Latest articles

சசிகுமார் நடித்து இரா சரவணன் இயக்கிய ‘நந்தன்’ திரைப்படம்… சமூக மாற்றத்தை நிகழ்த்திய சிறந்த படைப்பாக தேர்வு செய்து கெளரவிக்கும் டெல்லி தமிழ்ச் சங்கம்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம்....

ராக்ஸ்டார் அனிருத்தின் ‘வைப் வித் அரவிந்த்.’ உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் உற்சாக கொண்டாட்டம்!

உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’...

பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார்! -‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா

ஆர்யா, சுனில் நடித்துள்ள, வரவிருக்கும் தமிழ் – மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில்...

மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கும் அன்னா பென்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்! -‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர்...

More like this