HomeCinemaமனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை மையப்படுத்தி உருவான சிங்கா' படத்தின் முதல் பார்வை வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை மையப்படுத்தி உருவான சிங்கா’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

Published on

புகழ்பெற்ற இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவத்தைப் பெற்ற இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் படம் ‘சிங்கா.’

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக, உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் திறமையான நட்சத்திரக் குழு ஒன்றாகக் களம் இறங்குகிறது. தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த கயல் சந்திரன் கதையின் உணர்ச்சி மையத்துடன் இணையும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சிஜா ரோஸ், மலையாளத்தில் புகழ்பெற்ற புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாளத்தின் பிரபல நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் இணைகின்றனர்.

கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது.

முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரையுலக ரசிகர்கள் அனைவரையும் சிங்காவின் ஆத்மார்த்தமும், பொழுதுபோக்கும் கலந்த கதையை வரவேற்க அழைக்கிறோம்.

அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Latest articles

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி...

More like this