Tuesday, February 17, 2026
spot_img
HomeCinemaமலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய படம் இது! -ஏப்ரல்...

மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய படம் இது! -ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ள ‘தி டார்க் ஹெவன்’ பற்றி சொல்கிறார் இயக்குநர் பாலாஜி

Published on

சித்து – பிக்பாஸ் தர்ஷிகா நடிப்பில் நாட்டார் கதையை மையப்படுத்திய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய படம் இது.

நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.

படம் பற்றி, படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ள பாலாஜியிடம் கேட்டபோது, “இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.

எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார். இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார். இவர்கள் அனைவரும் என் நண்பர்கள்.

படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவாலான பகுதிகளில் படமாக்கப்பட்டு
முடிவடைந்து விட்டது.

டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன” என்றார்.

Latest articles

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...

‘கிகி & கொகொ’ படத் தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் – மைக்செட் ஸ்ரீராம் திறந்து வைத்தனர்! கிளாம்பாக்கத்தில் உற்சாகம்.

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங்...

More like this

தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிபுதிய அனுபவம் தரப்போகும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

புதுமையான கதையம்சத்தில் ரொமாண்டிக் ஃபேண்டஸி படைப்பாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ்...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான...
error: Content is protected !!