HomeGeneral'யானை மரம்' திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! -பள்ளி...

‘யானை மரம்’ திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! -பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு இயக்குநர் பேரரசு  கோரிக்கை

Published on

‘யானை மரம்’ என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத படைப்பு.
இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டும் இயக்கவில்லை, நம்மையும் இயக்குகிறார்.
யானை மரத்திற்கு நீராக சமூக நீதியையும், உரமாக மனிதநேயத்தையும் இட்டிருக்கிறார்.
முக்கியமாக மாணவ, மாணவிகள் அனைவரும் காண வேண்டிய அறிவுப்பூர்வ படைப்பு.
தமிழக அரசு இப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் படியான நிலையை உருவாக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார்!
தேசிய விருதுக்கு அனுப்ப கூடிய படம் ‘யானை மரம்’ என்று, படம் பார்த்த இ.வி.கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை தற்போது யானையின் உருவத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான்.
பரமு, அந்த யானை மரத்தை நண்பனாக பாவித்து அதனிடம் தன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த சமூகத்தில் அவனுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும் யானை மரத்திற்கும் உண்டான நட்பு என்ன ஆனது? என்பதே இந்த திரைப்படத்தின் கதை.
மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் இந்த கதையில் வாழ்ந்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, ஒளிப்பதிவு தமிழ் மாறன், கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர் கோவிந்தராஜ், ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார்.
இதுவரை 20 சர்வதேச விருதுகள் இப்படம் பெற்றுள்ளது. உலக நாடுகளில் 16 இடங்களில் திரையிடப்பட்டு, பாராட்டுக்கள் பெற்று வருகிறது. விரைவில் திரைக்கும் வருகிறது ‘யானை மரம்’!

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this