தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்க, சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு.’
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் எஸ்.வி. சேகர், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா, நடிகை நந்திதா ஸ்வேதா, அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர்.
படம் துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.
‘சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…’ என்ற அழுத்தமான ஒன் லைனுடன் வெளியாகியுள்ள முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
படத்தில் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.




