HomeCinemaசிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட, கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் 'யூத்' படத்தின் முன்னோட்டம்!

சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட, கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘யூத்’ படத்தின் முன்னோட்டம்!

Published on

பாடகர் – இசைக்கலைஞர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ‘யூத் – Youth’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யூத் – Youth’ திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இவர்களுடன் சின்னத் தமிழா – தாஜ் மோலா – கெட்டவன் மணிகண்டன் – சுரேன் வின்சென்ட் உள்ளிட்ட டிஜிட்டல் திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன்.. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், மார்ச் மாதம் 19 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் பசுமையாய் பதிந்த பள்ளிக்கூட நாட்களை நினைவு படுத்துவதால் .. இதற்கு அதிக அளவில் வரவேற்பு  கிடைத்திருக்கிறது.
விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் களங்கமற்ற சந்தோசம் கொண்ட வாழ்வியல் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this