HomeCinemaவிஜய் சேதுபதியின் வாழ்த்தோடு வெளியானது கயல் ஆனந்தி நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதியின் வாழ்த்தோடு வெளியானது கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’ இயக்குநர் சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதையில் காவல் கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கயல் ஆனந்தியின் இந்த முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை டி.என். கபிலன் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணிபுரிகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் ‘பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ்’ ரஞ்சனி படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்றார்.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this