HomeCinemaபிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட 'வாரண்ட்' சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Published on

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட் சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.

வரும் 22-ம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள இந்த சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் கதையின் நாயகன் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியபோது புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியபோது நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.

கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...