HomeGeneralபடத்தை உருவாக்குவதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளோம்; காட்டுப் பகுதி முழுவதும் அரங்குகளாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது! -அரிகொம்பன்...

படத்தை உருவாக்குவதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளோம்; காட்டுப் பகுதி முழுவதும் அரங்குகளாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது! -அரிகொம்பன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் 

Published on

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்துள்ள அரிகொம்பன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 24.11.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் மீதுன் மகேஸ்வரன் பேசும்போது,
நடிகராகத் திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த எனக்கு, இன்று இயக்குநராகவும் இந்த மேடையில் நிற்பது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதே நேரத்தில், இந்தப் பயணம் மனதளவில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, இயக்குநராகப் பணியாற்றிய முன் அனுபவம் எதுவும் எனக்குக் கிடையாது. இதுவரை எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. நான் நடித்த திரைப்படங்களின் அனுபவங்களையே அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கினேன். நான் பணியாற்றிய அனைத்து திரைப்படங்களின் இயக்குநர்களையும் எனது குருவாகவே கருதுகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களே இப்படத்தை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவின.
‘அரிகொம்பன்’ திரைப்படம் 1980-ஆம் ஆண்டின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை உருவாக்குவதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளோம். குறிப்பாக, படத்தில் இடம்பெறும் காட்டுப் பகுதி முழுவதும் அரங்குகளாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்கள், குளம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் அனைத்து இடங்களையும் கலை இயக்குநர் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதற்காகச் சுமார் ஆறு மாதங்கள் உழைத்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யானை தொடர்பான காட்சிகளையும் அவரே உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் எங்களைவிட அதிக நேரம் செலவிட்டு உழைத்தவர் அவர்தான். அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
இப்படத்தின் இசையமைப்பாளர் சாகிஷ்ணா சேவியர் எனது நீண்டகால நண்பர். அவரைப் பற்றிப் பேசுவதற்கு வார்த்தைகள் போதாது. இப்படத்தின் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தைப் பார்க்கும்போது அவரது பின்னணி இசையின் வலிமையை ரசிகர்கள் உணர்வார்கள். அது படத்திற்கு யானை பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் அனீஷ் லால் கேரளத் திரையுலகில் சுமார் 15 முதல் 16 திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது அவருடைய முதல் தமிழ்த் திரைப்படம். கதையைக் கேட்டவுடன் இப்படத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். சாகிஷ்ணா சேவியர் மற்றும் அனீஷ் லால் ஆகிய இருவரும் தங்களது முழுமையான உழைப்பை வழங்கி, இப்படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். ஒரு கதையைத் தாளில் எழுதுவது எளிது. ஆனால், அதனைத் திரையில் காட்சிகளாக மாற்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவால். அந்தப் பணியை இருவரும் சிறப்பாகச் செய்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் நடித்த மூத்த நடிகர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின்போது பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தன. காட்டுப் பகுதியிலேயே அனைவரும் ஒன்றாக வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் என்றும் மறக்க முடியாததாக இருக்கும். படத்தில் பங்களித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நேரம் கருதி எனது உரையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். ‘அரிகொம்பன்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிகரமான படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்றார்.
கதாநாயகி தேவிகா கிருஷ்ணன் பேசும்போது,
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தபோது, கல்லூரிக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சுப்பிரமணி சார், முருகதாஸ் சார், அப்புக்குட்டி சார், ஆத்ரா மேடம், பாஸ்கர் சார் எனப் பல மூத்த மற்றும் அனுபவமிக்க கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய உயரத்தை அடையும் என்று நம்புகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இப்படத்தை வெற்றிப் படமாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,
திரைப்படங்களில் தொடர்ந்து தீவிரமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால், இந்த மேடையிலாவது நகைச்சுவையாகப் பேசுகிறேன். இந்தப் படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஏற்கெனவே ‘எங்க காட்டுல மழை’ திரைப்படத்தில் மிதுனுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். மிதுன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது, கதையைக் கேட்டுத் தனது சம்மதத்தைத் தெரிவித்தேன். கதையை மிதுனே விவரித்தபோது, அவரே இப்படத்தின் இயக்குநர் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார். இயக்கம் என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதால், மிதுன் இந்த முயற்சியில் இறங்குவது குறித்து ஆரம்பத்தில் எனக்குச் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் கதையின் மீது இருந்த நம்பிக்கை மகிழ்ச்சியளித்தது. தனது கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருந்ததால் கதையைக் கேட்டதுமே நடிப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, காடுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படத்திற்கான அரங்குகள் மற்றும் சூழலை அமைப்பது மிகவும் கடினமான பணி என்றாலும், படப்பிடிப்புத் தளத்தை நேரில் பார்த்தபோது மிதுனின் இயக்கத் திறன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
சிவா, முருகதாஸ் உள்ளிட்ட கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக அமைந்தது, படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிப் பழகினோம். இப்படத்தில் கேரவன்கள் இல்லாமல் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தது கலைஞர்களிடையே நல்ல நட்பையும் நெருக்கத்தையும் உருவாக்கியது.
கலை இயக்குநரின் பணியைப் பாராட்டிய அவர், படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட அரங்குகள் செயற்கையாகத் தெரியாமல், உண்மையான கிராமத்திற்குள் சென்று படப்பிடிப்பு நடத்தியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. படப்பிடிப்புத் தளத்தில் அவ்வப்போது பாம்புகள் தென்பட்டது. ஆனால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.. அதிகாலையில் மயில்களின் ஒலியைக் கேட்டபடி இயற்கையான சூழலில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
மிதுனின் நடிப்பும் உழைப்பும் இப்படத்தில் பெரிதும் பேசப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், திரைப்படம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
நடிகர் ஆடுகளம் முருகதாஸ் பேசும்போது,
இந்தத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த மிதுன் மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சிறந்த திரைப்படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
யானையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் வெற்றிபெறுவது வழக்கம். யானை கர்ப்பமாகி குட்டி ஈனுவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுவதைப் போல, இந்தத் திரைப்படத்தையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறேன். யானையின் ஆயுட்காலம் 60 முதல் 70 ஆண்டுகள் வரை இருப்பதைப் போல, இப்படமும் நீண்ட காலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் என்றும், திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை மீண்டும் அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என்றார்.
மேலும், யானை இடம்பெற்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு விஜய் அண்ணனின் கொடியிலும் யானை இடம்பெற்றிருக்கிறது. இப்படத்திற்காக ஒட்டுமொத்தக் குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எனக்கு இத்திரைப்படத்தில் சிறப்பான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றார்.

Latest articles

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்! -நடிகை பவ்யா திரிகா

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா....

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...

ஸ்ருதிஹாசன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த...

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற...

More like this

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்! -நடிகை பவ்யா திரிகா

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா....

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...

ஸ்ருதிஹாசன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த...