HomeCinemaமிர்ச்சி விஜய் நடிக்க, ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் Wife படப்பிடிப்பு நிறைவு!

மிர்ச்சி விஜய் நடிக்க, ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் Wife படப்பிடிப்பு நிறைவு!

Published on

‘டாடா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் எஸ் அம்பேத் குமார் இப்போது தயாரிக்கும் ‘Wife’ என்ற படத்தில் மிர்ச்சி விஜய், அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஹேமநாதன் ஆர் இயக்க, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.ஏ. சக்திவேல் மற்றும் சிவா ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இந்த வார இறுதியில் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. ஏற்கனவே போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தை திட்டமிட்டபடி வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this