HomeMovie Reviewஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

Published on

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம்.

கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்கிறார். மனைவியின் லட்சியம் நிறைவேறுகிறது. இவ்வளவுதான் கதை.

லட்சியத்தை அடைவதென்பது எல்லோருக்கும் போராட்டமானதுதான்; அதுவும் பெண்கள் எனும்போது போராட்டம் அதிகமாக இருக்கும். சாத்வீகா எப்படியான போராட்டங்களைச் சந்திக்கிறார் என்பதை, துல்கர் எப்படியெல்லாம் அவருக்கு துணையாக இருக்கிறார் என்பதை காட்சிகளாகப் பார்க்கிறபோது நிச்சயம் ஒரு தருணத்திலாவது கண் கலங்கிவிடும். அந்தளவுக்கு உணர்வுபூர்வமான திரைக்கதையில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்

தனக்கு இப்படியொரு கணவர் கிடைக்க மாட்டாரா என பெண்கள் ஏங்கும் அளவுக்கு அன்பான கணவராக, மனைவியின் கனவை நனவாக்க தன் ஆசைகளை தியாகம் செய்கிறவராக வாழ்ந்திருக்கிறார் துல்கர் சல்மான்.

மனைவியாக வருகிற சாத்விகா வீரவல்லிக்கு நடிப்பு தாறுமாறாய் வருகிறது. அவருக்கான காட்சிகளில் அவரை மட்டுமே கவனிக்கும்படியான முகபாவம், உடல்மொழி என கதையின் கனத்தை தாங்கியிருக்கிறார்.

கம்பீரமான தொழிலதிபராக, சாத்விகாவின் விண்வெளி கனவுக்கு உதவுகிற பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் கவனம் பெறுகிறார் ஸ்ருதிஹாசன்.

முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் ருஹானி ஷர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், நாசர், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவீன், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா, வாசு இன்டூரி உள்ளிட்டோர் திரையை நிரப்புகிறார்கள்.

ஃபீல் குட் உணர்வு தருகிற கதைக்கு கூடுதல் உயிரோட்டம் தருகிறது ஜி வி பிரகாஷின் பின்னணி இசை. பாடல்களும் இதம் பரப்புகின்றன. ஒளிப்பதிவு தரம்.

மனிதர்களில் பெரும்பாலும் கனவுகளை அடைவதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்தான். அவர்களுக்கெல்லாம் இந்த படம் தன்னம்பிக்கை தருவது உறுதி.

Rating 3.5 / 5

Latest articles

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

தயாரிப்பாளர் கண்ணன் ரவி உள்ளிட்ட பிரபலங்களின் பங்கேற்போடு உற்சாகமாக நடந்த ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா! 

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில்...

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மனித உறவுகள், குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மொழி மற்றும் எல்லைகள்...

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தனது மகளின் பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஹாவுக்கு அன்பான வாழ்த்துகளை இணையத்தில்...

More like this