HomeCinemaசுவாரஸ்யங்களின் தொகுப்பாக உருவான 'வேற மாறி ஆபிஸ்' சீசன் 2 விரைவில் ஆஹா ஓடிடி'யில் வெளியாகிறது!

சுவாரஸ்யங்களின் தொகுப்பாக உருவான ‘வேற மாறி ஆபிஸ்’ சீசன் 2 விரைவில் ஆஹா ஓடிடி’யில் வெளியாகிறது!

Published on

காதல், நட்பு, பரபரப்பு என இன்றைய ஐடி உலக இளைஞர்களின் வாழ்வை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தி, ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் வெளியாகி, தினசரி தொடராக 50+ எபிசோட்களை எட்டி, பெரியளவில் வரவேற்பு பெற்ற ‘வேற மாறி ஆபிஸ்’ சீரிஸின் 2வது சீசன் விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஆர் ஜே விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டன், வி ஜேபார்வதி, ஜனனி அசோக் குமார், சியாமா ஹரிணி, ஆர் ஜே சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வி ஜே பப்பு உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்திருந்த  சீசன் 1, கார்ப்பரேட் வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வினோதங்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த கதாபாத்திரங்கள் சீசன் 2-ல் மீண்டும் வருகிறது.

சமீபத்தில் வெளியான சீசன் 2 டீசர், அதில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், என்னவெல்லாம் இருக்குமென்பதை செம்ம கலாட்டாவுடன் சிரிக்கச் சிரிக்க வெளிப்படுத்தியது.

ரசிகர்களை இந்த சீரிஸ் சீட்டின் நுனியில் அமர வைக்கும், பரபர திருப்பங்களுடன்,  ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தின் உலகத்தை ஆராயும்,  வகையில்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்த்தியது.

முதல் சீசனில் நடித்தவர்கள் தவிர ரவீனா தாஹா, ஜெய்சீலன், சப்னா ஐயர், விஸ்வ மித்ரன் ஆகியோர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சுவாரஸ்யமான இந்த சீரிஸை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this