HomeCinemaவினோத்குமார் இயக்கி நடிக்கும் வீரநகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட டி.ராஜேந்தர்! தேனிசைத் தென்றல் தேவா...

வினோத்குமார் இயக்கி நடிக்கும் வீரநகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட டி.ராஜேந்தர்! தேனிசைத் தென்றல் தேவா குரலில் அஸ்மிதாவின் அசத்தல் நடனத்தில் உருவாகிறது பிரமாண்ட பாடல்!

Published on

வினோத்குமார் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘வீரநகரம்’ படத்தில் கதாநாயகிகளாக சாராமோனு & ரோஸ்‌ நடிக்கிறார்கள். படத்தில் நான்கு வில்லன்கள். முக்கிய வில்லனாக மைக்கேல்ராஜ் மிரட்ட, சாய்தீனா சுவாரஸ்யமான காட்சியில் வருகிறார்.

காமெடிக்கு லொள்ளு சபா மனோகர், திருப்பாச்சி பெஞ்சமின் இருவரும் இணைய முக்கிய கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் டும்கான் மாரி நடிக்க, விஸ்வாசம் சிட்டுக்குருவி பாட்டி, ஈரோடு சேகர், விஜய் சங்கர், லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தில் ரசிக்கும்படியான ஒரு குத்துப் பாட்டு இடம்பெறுகிறது. அதை ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாட, ‘சலீம்’ படத்தில் ‘மஸ்காரா போட்டு மயக்குறியே’ பாடலில் ஆடிய அஸ்மிதா ஆடமாடவிருக்கிறார்.

அந்த பாடலில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், பாடலை மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்த, இயக்குநர் வினோத்குமார் விரைவில் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக படத்தின் டிரெய்லர மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா  நடைபெறவிருக்கிறது என்றார்.

முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரும்,  திரைப்பட நடிகர்களும் அரசியல் தலைவர்கள் சிலரும் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்கள்.

படக்குழு:-
இசை: முகேஷ் முனுசாமி
ஒளிப்பதிவு: விஜய் வெங்கட்
எடிட்டிங்: ரத்தினம் பாலாஜி
பாடல்கள்: திருண்சூர்யா
ஒப்பனை: நந்தினி
நடனம்: நவீன்குமார் ஹரி
மக்கள் தொடர்பு: மணிகண்டன்

Latest articles

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

உற்சாகமாய் நடந்த, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி நடிக்கும்  ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’  படத்தின் துவக்க விழா!

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் நடிப்பில், கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ்...

கிராமத்து மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக...

More like this