HomeCinemaகவிஞர் வைரமுத்து வைத்த தலைப்பில் உருவான 'வேட்டைக்காரி' விரைவில் ரிலீஸ்!

கவிஞர் வைரமுத்து வைத்த தலைப்பில் உருவான ‘வேட்டைக்காரி’ விரைவில் ரிலீஸ்!

Published on

வெளியில் இருந்து பார்க்கும்போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் கதைக்களமாக கொண்ட படம் ‘வேட்டைக்காரி.’

ராகுல் கதாநாயகனாக நடிக்க, சஞ்சனா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பு கவிஞர் வைரமுத்து வைத்தது என்பது விசேஷ செய்தி.

படத்தின் இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையைச் சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்’ என்று சொல்லி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினாராம் வைரமுத்து.

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் அமைந்த பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதை தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:
தயாரிப்பு: ‘ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ்’ விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: காளிமுத்து காத்தமுத்து
இசை: ஏ.கே.ராம்ஜி
ஒளிப்பதிவு: கே.ஆறுமுகம்
நடனம்: பவர் சிவா

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this