HomeCinemaஜெயிலர் 2 படத்தின் கதை என்னவாக இருக்கும்? பிறந்தநாளைக் கொண்டாட பத்திரிகையாளர்களை சந்தித்த வசந்த் ரவி...

ஜெயிலர் 2 படத்தின் கதை என்னவாக இருக்கும்? பிறந்தநாளைக் கொண்டாட பத்திரிகையாளர்களை சந்தித்த வசந்த் ரவி சொன்னது என்ன?

Published on

தனித்துவமான கதாபாத்திரங்களில், வித்தியாசமான கதைகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம் ’பொன் ஒன்று கண்டேன்.’ ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகி, பெரியளவில் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த உற்சாகத்தை பகிர்வதற்காகவும், வரும் ஏப்ரல் 18 அன்று வரப்போகிற தனது பிறந்தநாளை முன்னதாக கொண்டாடுவதற்காகவும் வசந்த் ரவி இன்று (16.4.2024) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தஅனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த விமர்சனங்கள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது.

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.

’ஜெயிலர்2’ வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட்2க்கான லீட் இருக்கு சார்’ என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி. வித்தியாசமான படங்களில் நடித்து மீண்டும் உங்களை சந்திக்கிறேன்” என்றார்.

Latest articles

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் ரசிக்கும்படியான படம் என்று சொல்லலாம். அப்படியான சாகசங்கள் நிரம்பிய அனிமேஷன் ஃபேண்டஸி படம். லின்...

புதுச்சேரி முதலமைச்சரிடம் ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

More like this