HomeCinemaசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்... கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் படை தலைவனில் நடித்து...

சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்… கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் படை தலைவனில் நடித்து ஊக்குவிப்பு!

Published on

‘படை தலைவன்’ பட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.

இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம்.கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை , மக்களுக்கு தெரியப் படுத்துவதில், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்!

Latest articles

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும்...

சத்ய தேவ் நடிக்கும்  ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை...

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் (SLV Cinemas) தயாரிப்பில் உருவாகும்...

இந்த படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதைதான்! -‘பரிமளா & கோ’ பட விழாவில் நடிகர் ஜெயராம் பேச்சு

குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா...

More like this