HomeCinemaஆயிஷா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' படத்தில் பெரிய மருதாக ஜெ எம் பஷீர்!...

ஆயிஷா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ படத்தில் பெரிய மருதாக ஜெ எம் பஷீர்! ஆர்.அரவிந்தராஜ் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிறது.

Published on

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது.

டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ எம் பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தேவர் மஹாலில் ஜனவரி 3 புதன்கிழமை அன்று நடைபெற்றது. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ எம் பஷீர், “வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி,” என்றார்.

நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே ‘தேசிய தலைவர்’ மற்றும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் மேலும் தெரிவித்தார்.

‘தேசிய தலைவர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து ‘வீர மங்கை வேலு நாச்சியார்’ படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார். வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

‘வீர மங்கை வேலு நாச்சியார்’ திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர்.

Latest articles

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

More like this