HomeCinemaகண்ணா ரவி நடிக்கும் 'வேடுவன்' அதிரடி வெப் சீரிஸ் அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில்...

கண்ணா ரவி நடிக்கும் ‘வேடுவன்’ அதிரடி வெப் சீரிஸ் அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது!

Published on

கண்ணா ரவி நடிக்கும் அதிரடி தமிழ் வெப் சீரிஸ் ‘வேடுவன்’ அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது!

கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வேடுவன்’ சீரிஸ், வரும் அக்டோபர் 10-ம் முதல் இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல் ஸ்ட்ரீமாகவுள்ளது. இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.

மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.

சீரிஸ் பற்றி கண்ணா ரவி பேசியபோது “வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி – தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸாக மட்டுமல்ல, நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்” என்றார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this