HomeCinemaநடிகர் சத்யராஜ், இயக்குநர் கதிர், பாடகர் அந்தோணி தாசன் உள்ளிட்டோரின் நினைவேந்தல் உரையுடன் நடைபெற்ற இயக்குநர்...

நடிகர் சத்யராஜ், இயக்குநர் கதிர், பாடகர் அந்தோணி தாசன் உள்ளிட்டோரின் நினைவேந்தல் உரையுடன் நடைபெற்ற இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு நிகழ்வு!

Published on

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த போது தொலைபேசியில் ஆறுதல் சொல்ல அழைத்தபோது ‘நான் பிறந்து பெரியாரின் கருத்துக்களை இந்த மக்களுக்கு என்னால் முடிந்தவரை கொண்டு சேர்த்திருக்கேன். நான் வந்த வேலை நிறைவாக முடிந்திருக்கிறது’ என்று சொன்னதாகவும் பேசிய அவர், ஒரு பகுத்தறிவாளன் மரணத்தைக் கூட எப்படி இயல்பாக எடுத்துக் கொள்கிறார் பாருங்கள் என்று சிலாகித்து பேசினார்.

மேலும் வந்திருந்த ஆளுமைகள் அனைவரும் வேலு பிரபாகரனுக்கும் தங்களுக்குமான நட்பையும், அன்பையும், தங்கள் அனுபவங்களையும் கூறி இயக்குநர் வேலு பிரபாகரனின் கொள்கை பற்றியும், சிந்தனைக் கூர்மையையும், தொழில்நுட்ப வல்லமையையும் பாராட்டி அவரது நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தொகுத்து வழங்கி தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அவருக்கு உற்ற துணையாக இருந்த டிஜிட்டலி ஜெகதீஷ், அவரது சகோதரர் வேலு ராஜா, அர்ஜுன் வேலு ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றி உரையாற்றினர்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this