HomeCinemaமதுரை காந்தி மியூசிய வளாகத்தில் நடிகர் விஜய்விஷ்வா ஒருங்கிணைத்து நடத்திய 'சித்திரை ஆடை அலங்கார திருவிழா'...

மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் நடிகர் விஜய்விஷ்வா ஒருங்கிணைத்து நடத்திய ‘சித்திரை ஆடை அலங்கார திருவிழா’ கிராண்ட் புக் ஆஃப் யூனிவர்ஸ் ரெக்கார்ட் உலக சாதனையாக அங்கீகாரம் பெற்றது! 

Published on

நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா அவர்களின் விவி என்டர்டைன்மெண்ட் மற்றும் மாமதுரையர்கள் எம் ஆர் பிரமோட்டர்ஸ் & ஸ்டார் டிரஸ்ட் டி குருசாமியுடன் இணைந்து நம்ம ஊரு வைப்ஸ் சிறப்பு சித்திரை ஆடை அலங்கார திருவிழாவை நடத்தியது.

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மீனாட்சி அம்மன், அழகர், கருப்பணசாமி, முருகன் போன்ற சாமி வேடமணிந்து கலந்து கொண்டது காண்போரை நெகிழச் செய்தது. இந்த கோலாகல விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனர் திரு.ஜே.கே.முத்து, தபோவன் தீனதயாளன், சமுத்ரா செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முத்தாய்ப்பாக குழந்தைகளின் கண்கவர் பாட்டு போட்டி மற்றும் நடனம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாமதுரையர் அமைப்பின் அகில.உலக தலைவர் க.திருமுருகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது விவி என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.

400 நாட்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரம் பேர் அன்னதானம் வழங்கும் திரு ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட் குருசாமி அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது

முக்கிய நிகழ்வாக எம்.ஆர் புரோமோட்டர்ஸ் நிறுவனத் தலைவர் நெல்லை சிங்கம் திரு மணிகண்டன் உருவாக்கிய கள்ளழகர் சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற குழந்தைகளில் ஒருவரை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து வீட்டுமனையை பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதோடு 2 குழந்தைகளுக்கு 50% சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை கிராண்ட் புக் ஆஃப் யூனிவர்ஸ் ரெக்கார்ட் உலக சாதனையாக அங்கீகரித்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமதுரையர் அமைப்பு மற்றும்.
விவி எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் நிறுவனர் விஜய்விஷ்வா மற்றும் vv entertainments நிர்வாகிகள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Latest articles

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’...

‘டோரதி’ நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது! – நடிகை ஜீவா சுப்பிரமணியம்

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம்...

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4′ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன்...

என்னிடம் ஈகோ இருந்தது; இயக்குநரிடம் என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொன்னேன்! -கில்ட் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கஸ்தூரி ராஜா பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ படக்குழுவினருக்கு கில்ட் தயாரிப்பாளர் சங்கம்...

More like this