HomeCinemaவிக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தில் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஸ்டார்’ படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ( Rise East Entertainment) நிறுவனம் – அஸ்யூர் பிலிம்ஸ் ( Assure Films) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இயக்குநர் சண்முக பிரியன் – ‘நோட்டா’, ‘ எனிமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். மற்றும் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘லவ் மேரேஜ்’ தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது”என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகன்- நாயகி மற்றும் கேரக்டர்களின் தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி கவனிக்கிறார்.

Latest articles

அனந்தன் காடு சினிமா விமர்சனம்

முதலமைச்சருக்காக கொலைகள் செய்து கொண்டிருக்கும் கூலிப்படைக் கும்பலில் ஈழ விடுதலைப் போராளியொருவன் அடைக்கலம் கேட்டு ஒட்டிக் கொள்கிறான். முதலமைச்சருக்காக...

குடும்பங்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதையில், இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் குட் நியூஸ்' திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! இவ்விழாவில் தமிழ்...

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

யோகிபாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படம் வரும் ஜூலை 17-ம் தேதி...

ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

'குடி காதலைக் கெடுக்கும்' என்ற ஒன்லைனில் சமூக விழிப்புணர்வுப் படைப்பாக 'ப்ராமிஸ்.' குடிக்க மாட்டேன் என காதலிக்கு செய்து கொடுத்த...

More like this