HomeCinemaவிக்ரம் பிரபுவுடன் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்தை வழங்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ! 

விக்ரம் பிரபுவுடன் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்தை வழங்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ! 

Published on

திரைப்படத் தயாரிப்பாளர் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்க விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம் தொடங்கியிருக்கிறது.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகனான அக்‌ஷய் குமார் அறிமுகமாகும் முதல் படம் இது.

இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் கதையை ‘டாணாக்காரன்’ புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.

திறமை மற்றும் கடின உழைப்பு இருப்பவர்களை நிச்சயம் கோலிவுட் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். அதேபோல் அக்‌ஷய்குமாரிடம் இருக்கும் திறமையும் உழைப்பும் பெரியளவிலான வெற்றியை அவருக்கு நிச்சயம் வழங்கும் என நம்பலாம்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்கின்றனர். ஸ்ரீமன் ராகவன் (கலை) மற்றும் வர்ஷினி சங்கர் (ஆடை வடிவமைப்பாளர்). முதற் கட்டப்படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்தார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார். இவரது தயாரிப்பில், இந்த வருடம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ உட்பட சில படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

Latest articles

அனந்தன் காடு சினிமா விமர்சனம்

முதலமைச்சருக்காக கொலைகள் செய்து கொண்டிருக்கும் கூலிப்படைக் கும்பலில் ஈழ விடுதலைப் போராளியொருவன் அடைக்கலம் கேட்டு ஒட்டிக் கொள்கிறான். முதலமைச்சருக்காக...

குடும்பங்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதையில், இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் குட் நியூஸ்' திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! இவ்விழாவில் தமிழ்...

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

யோகிபாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படம் வரும் ஜூலை 17-ம் தேதி...

ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

'குடி காதலைக் கெடுக்கும்' என்ற ஒன்லைனில் சமூக விழிப்புணர்வுப் படைப்பாக 'ப்ராமிஸ்.' குடிக்க மாட்டேன் என காதலிக்கு செய்து கொடுத்த...

More like this