HomeCinemaபொங்கல் திருநாள் கொண்டாட்டமாக ஜனவரி 10-ல் வெளியாகும் வணங்கான்!

பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக ஜனவரி 10-ல் வெளியாகும் வணங்கான்!

Published on

அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க, சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாலாவின் இயக்கியுள்ள ‘வணங்கான்’ வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது.

பொங்கல் வெளியீட்டு பட்டியலில் எந்தெந்த படங்கள் இடம்பிடிக்க இருக்கின்றன என்கிற அறிவிப்புகள் எதுவும் இதுவரை உறுதியாகாத நிலையில் ‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் முதல் அறிவிப்பாக வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது.

அதற்கு கட்டியம் கூறும் விதமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தபடத்தில் இருந்து அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், ஒரு கையில் விநாயகர் சிலையையும் எடுத்து வரும் சில நொடிக் காட்சிகளையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்தூள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘மாநாடு’ என்கிற பிளாக் பஸ்டர் வெற்றிப் படத்தை தொடர்ந்து வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதுடன், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஆறு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார்.. பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this