HomeGeneralமஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகிறது ‘மஹாவீர்...

மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகிறது ‘மஹாவீர் கர்ணா.’

Published on

பென் மூவீஸ் ஜெயந்திலால் கடா வழங்க, ஆர்வி ஸ்டூடியோஸ் – ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா.’
மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரமேஷ் வர்மா (RAMESH VARMA) பிரம்மாண்ட திரை அனுபவத்தை காட்சிப்படுத்த இருக்கிறார். ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர்.
இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசர வைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது.
கௌரவம், விசுவாசம், தியாகம் தான் கர்ணனின் விதியை நிர்ணயித்தன. அந்த மாவீரனின் கதையை உணர்வுபூர்வமாகவும், பிரம்மாண்டமாகவும் சொல்லவிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் வர்மா. படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.
‘மஹாவீர் கர்ணா’ மூலம் கர்ணனின் உலகம் உங்கள் கண் முன்னால் விரியவிருக்கிறது. மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ் அதை செய்துகாட்டுவார்.
மஹாவீர் கர்ணன், உச்சம் தொடப் பிறந்த வீரன்…அவரது காவியம் நீக்கமற வாழும் புராணம்…
அவர் புகழைத் தாங்கிவரும் ‘மஹாவீர் கர்ணா’ உலகெங்கும் 2027-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடத்தில் வெளியாகும்.

Latest articles

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்...

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

More like this