HomeCinemaவிவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘பரமன்’ நவம்பர் 29ல் ரிலீஸ்!

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘பரமன்’ நவம்பர் 29ல் ரிலீஸ்!

Published on

விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி, இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜெ சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்.’

ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.

பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் சூப்பர்குட் சுப்பிரமணி, பழ. கருப்பையா, வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஷே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஷ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளார்.

படம் வரும் நவம்பர் 29-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “விவசாயத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் என்பதால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல ஜாம்பவான் இயக்குனர்கள் படம் பார்த்துவிட்டு படத்தை சிலாகித்து பாரட்டினார்கள். விவசாயம் அழிந்துகொண்டு வரும் இந்த காலகட்டத்தில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்படி ஒரு படம் வருகிறது. விவசாயத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள பாடகர் வேல்முருகன் பாடியுள்ள ‘கொண்டாட்டம் கும்மாளம் சந்தோஷமே’ என்கிற பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்ற ஆதரவு படத்திற்கும் மக்களிடம் இருந்து கிடைக்கும் என நம்புகிறோம்” என்கிறார்.

படக்குழு:-
தயாரிப்பு: இன்ஃபினிட் பிக்சர்ஸ்
இயக்கம், படத்தொகுப்பு: ஜெ சபரிஷ்
கதை: இதயநிலவன்
இசை: தமீம் அன்சாரி
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
பாடகர்கள்: வேல்முருகன், முகேஷ்
மக்கள் தொடர்பு: ஏ ஜான்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this