HomeCinemaநயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வீரசமர் நடிக்கும் மண்ணாங்கட்டி!

நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வீரசமர் நடிக்கும் மண்ணாங்கட்டி!

Published on

வீரசமர் பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலின் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்து பல படங்களில் அவருடன் பணியாற்றினார்.

‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் அமலாபால். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர்தான்.காதல், வெயில், பூ, பாண்டி, முத்துக்கு முத்தாக, வேலாயுதம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், கொம்பன், ஒரு கிடாயின் கருணை மனு, கடைக்குட்டி சிங்கம், குடிமகன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஜாக்பாட், தண்ணி வண்டி, டிஎஸ்பி, யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் குடிமகன், 1943 கப்பலேறிய தமிழன், பித்தளை மாத்தி, விழா நாயகன் என 30′ படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இதில் பல படங்களுக்கு இவர்தான் ஆர்ட் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இளைய பாலா இயக்கத்தில் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் ‘VJS-49’ படத்தில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிகிறார். அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வீரசமர், பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும், சில படங்களில் முக்கிய கதா பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வீரசமர், தான் கற்று கைதேர்ந்த ஆர்ட் டைரக்ஷன் பணிகளையும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

பிரபல நடிகர்களின் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற அயராது நடித்து வருகிறார் வீரசமர்.

மதுரை உசிலம்பட்டியில் இருந்து சென்னை வந்து, ஆர்ட் டைரக்டராகவும், நடிகராகவும் வலம் வந்தாலும், இன்னும் மண்மனம் மாறாமல் அனைவரிடமும் எதார்த்தமாக பழகி வருகிறார்.

தற்போது பெரிய நடிகர்களோடு இணைந்து பல படங்கள் நடித்து வருகிறார். அவரது முயற்சிகளும் எடுத்துக் கொள்ளும் பணிகளில் காட்டும் ஈடுபாடும் 2025-ல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை, தக்க வைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this