HomeCinemaவிஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா!

விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா!

Published on

சௌந்தரராஜா தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர். சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மாநாட்டை ஒட்டி நடிகர் சௌந்தரராஜா மற்றும் அவரது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் சைக்கிள் பேரணி சென்னையில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டது.

நடிகர் சௌந்தரராஜா தலைமையில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு மிதிவண்டியிலேயே பயணம் செய்கின்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டுள்ள சைக்கிள் பேரணியின் போது வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் மிதிவண்டி பேரணி நிறைவுபெறுகிறது.

பேரணியை முடித்துக் கொண்டதும் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த 250 பேர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this