HomeCinemaஇயக்குநர் வெற்றி மாறனின் பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தில் இளங்கலை திரைப்படக் கல்வி, முதுகலை...

இயக்குநர் வெற்றி மாறனின் பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தில் இளங்கலை திரைப்படக் கல்வி, முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பு துவக்கம்!

Published on

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்கும் நோக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறனால், பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் 19-08-2022 அன்று நிறுவப்பட்டது. இந்நிறுவனம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி தற்போது இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) துவங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன், நிறுவனத் தலைவர் வெற்றிமாறன்,ஆர்த்தி வெற்றிமாறன் மற்றும் பேராசிரியர் ராஜநாயகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமிகு.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய மாணவர்களான மோனிஷா, பிரின்ஸ் மற்றும் பிரேம் பீட்டர் ஆகியோர் தாங்கள் இங்கே கற்றுக்கொண்ட புதிய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். உணவு அரசியலைப் பற்றியும், மண் சார்ந்த கதை சொல்லல் பற்றியும், பலதரப்பட்ட மாணவர்களை பற்றியும், கல்வியல்லாத பல்வேறு விஷயங்களையும் பலதரப்பட்ட அரசியல் கதைக்கருக்களையும் மேம்படுத்தவும் கற்றுக்கொள்ளவும் உதவிகரமாக இந்நிறுவனம் இருப்பதாக கூறினர்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியபோது,” இந்த நிறுவனத்தின் பயணத்தில் என்னை சேர்த்துக் கொண்ட வெற்றிமாறன் உட்பட அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்.இதற்கு முன்பு பேசிய மாணவர்கள் பேச்சின் மூலம் இங்கு கிடைக்கும் கல்வியின் மூலம் அவர்களுக்கு அரசியல் தெளிவு சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது பலமடங்கு அதிகமாகும். எப்போது கற்றுக் கொள்ள தயாராக இருங்கள். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

‘கலைப்புலி’எஸ்.தாணு பேசியபோது,”இக்கல்வி நிறுவனத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறந்த நிலையை அடையும் என்று வாழ்த்தினேன், அவ்வாறே இன்று மூன்றாமாண்டில் புது பட்டப் படிப்புகளுடன், இயக்குனர் வெற்றிமாறன், பேராசிரியர் ராஜநாயகம் ஆகியோரது வழிகாட்டுதல்களுடன் சிறப்பாக அடியெடுத்து வைப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்களது நிறுவனமும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று உறுதி அளித்து, ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று நிறைவு செய்தார்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசியபோது,”மாணவர்களை தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இந்நிறுவனம் துவங்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு துறைதான் என்றில்லாமல் பல்வேறு தளங்களிலும் மாணவர்கள் பயணிக்க வேண்டும். அதேபோல இந்நிறுவனம் துவங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த வெற்றிதுரைசாமி அவர்களின் நினைவாக ‘வைல்ட் லைஃப் போட்டோகிராபி’க்காக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்கள் கௌரவிக்கப் படுவார்கள். எங்களுடன் தோள்கொடுக்க வந்திருக்கும் விஜய் சேதுபதி, எங்களுக்கு பல விதத்திலும் உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு மற்றும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார், எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பல்வேறு உதவி புரிந்து கொண்டிருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் திரு.ஐசரி வேலன் அவர்களுக்கும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பேராசிரியர் ராஜநாயகம் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நிகழ்வின் நிறைவாக திருமதி ஆர்த்தி வெற்றிமாறன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...