HomeGeneral‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!

‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!

Published on

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.
உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்த அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.
விஷ்ணு விஷால் – சூரி இருவரின் நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“கட்டா குஸ்தி 2” திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

Latest articles

மியூசிக்கல் சப்ஜெக்ட் திரைப்படத்தில் அறிமுகமாகும் இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன்!

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின்...

சோனி லிவ் தமிழ் – நடிகை சமந்தா இணையும் சுவாரசியமான நிகழ்ச்சி!

சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் தொடங்குகின்றன. முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது! – நடிகை சிம்ரன் 

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த...

நாயகன் முதல் வில்லன் வரை 11 அதிரடி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் யோகிபாபு!

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி...

More like this