HomeGeneralமியூசிக்கல் சப்ஜெக்ட் திரைப்படத்தில் அறிமுகமாகும் இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன்!

மியூசிக்கல் சப்ஜெக்ட் திரைப்படத்தில் அறிமுகமாகும் இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன்!

Published on

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர் அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான ஜெயன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் திரைப்படமாக இது உருவாகிறது.
குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்!
தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் “என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன்” என்று ரமணன் பாலகங்காதரன் அவர்கள் முன்வந்தார். தன்‌ தம்பிக்காக இயக்குனர் வெங்கட் பிரபு, “நான் கதை தருகிறேன்” என்றும், யுவன் சங்கர் ராஜா “நான் இசை அமைக்கிறேன்” என்றும், இயக்குனர் சுதா கொங்கரா “நான் கிரியேட்டிவ் புரொடியூசராக (Creative Producer) இருக்கிறேன்” என்றும் தாங்களாகவே முன்வந்து இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
முன்னணி திரைப் பிரபலங்கள் அனைவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பிற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப் பட்டாளமும், பிரம்மாண்ட கூட்டணியும்!
இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் ஜெயனுடன் இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் அவர்களின் கூற்று:
 “ஜெயனைத் திரையுலகில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான மற்றும் புதிய வடிவிலான மியூசிக்கல் சப்ஜெக்ட் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அந்த குறையைப் போக்கும் ஒரு சிறந்த படைப்பாக ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ இருக்கும். வெங்கட் பிரபு சாரின் தனித்துவமான கதை, யுவன் சாரின் மேஜிக்கல் இசை மற்றும் சுதா கொங்கரா மேமின் கிரியேட்டிவ் பங்களிப்பு என அனைத்தும் இணைந்து இந்தத் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. உணர்வுப்பூர்வமான காட்சிகளும், பிரம்மாண்டமான இசையும் கலந்த ஒரு தரமான சினிமா அனுபவத்தை எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் வழங்கும்.”
இப்படத்திற்கு வெங்கட் பிரபு கதையெழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொடியூசராகப் பொறுப்பேற்றுள்ள இத்திரைப்படத்தை “குடும்பஸ்தன்” படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இசை, நட்பு, திறமை என அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவாகும் இந்தத் திரைப்படம் ஜெயனின் திரையுலகப் பயணத்திற்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Latest articles

‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,...

சோனி லிவ் தமிழ் – நடிகை சமந்தா இணையும் சுவாரசியமான நிகழ்ச்சி!

சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் தொடங்குகின்றன. முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது! – நடிகை சிம்ரன் 

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த...

நாயகன் முதல் வில்லன் வரை 11 அதிரடி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் யோகிபாபு!

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி...

More like this