HomeGeneralஉற்சாகமாக நடந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் எழுத்தில் உருவான 'உயிரிணையே' இசை ஆல்பம் வெளியீட்டு விழா!

உற்சாகமாக நடந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் எழுத்தில் உருவான ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா!

Published on

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில் ‘உறவுகள்’ என்ற தலைப்பில் ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலி தன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கங்கை அமரன் தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசியபோது அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும், அருமையான சமூக உறவுகளை ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார். எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம். எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம். அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா? இல்லையா? என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலை யாக பாடுவோம். இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம். AI-ல் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம். அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்  Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது. ஒரு தீம் ஐ AI இல் கொடுத்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது. இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது. எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும். வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை. 50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள். கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு” என்று சொல்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this