HomeCinemaஇயக்குநர் ஜோஷியின் பிறந்தநாளில் அவர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு... உன்னி முகுந்தனின் அக்சன் அதிரடியில்...

இயக்குநர் ஜோஷியின் பிறந்தநாளில் அவர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு… உன்னி முகுந்தனின் அக்சன் அதிரடியில் உருவாகிறது.

Published on

பல தசாப்தங்களாக ஹிட் படங்களை பல ஜானரில் கொடுத்து வருபவர் இயக்குநர் ஜோஷி. அவர் அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை இயக்கவிருப்பது குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது வென்ற ‘மேப்படியான்’ மற்றும் ரூ. 100 கோடி வசூலித்த ஆக்‌ஷன் திரைப்படமான ‘மார்கோ’ என மலையாள சினிமாவின் வணிகத்துக்கு புதுவரையறை கொடுத்ததை அடுத்து இயக்குநர் ஜோஷியுடன் இணைவதன் மூலம் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) நிறுவனம் தனது தரத்தை மேலும் மேம்படுத்துகிறது.

‘பொரிஞ்சு மரியம் ஜோஷ்’, ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற படங்களில் தனது வலுவான கதாபாத்திர வரையறை மற்றும் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர்- இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார். இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது.

இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்‌ஷன் அவதாரத்தில் நடிக்கிறார். குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் படங்கள் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது UMF.

மலையாள சினிமாவில் தரமான படம் தயாரித்து வரும் நிறுவனங்களில் ஐன்ஸ்டீன் மீடியாவும் ஒன்று. தரமான, பரிசிதனை முயற்சிகளை தைரியமாக கொடுக்கும் ஐன்ஸ்டீன் மீடியாவின் சமீபத்திய படம் ‘ஆண்டனி’. டார்க் ஹியூமர், வித்தியாசமான கதை சொல்லலுக்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘புருஷ பிரேதம்’ திரைப்படத்தையும் தயாரித்தது. தரமான கதைகள், உயர்தரமான தயாரிப்பு என்ற உயர்நோக்கத்துடன் ஐன்ஸ்டீன் மீடியா அடுத்தடுத்து படங்கள் தயாரித்து வருகிறது.

இந்த பிரமாண்ட திரைப்படம் புதுவித சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க இருக்கிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this