HomeMovie Reviewதிருப்பூர் குருவி சினிமா விமர்சனம்

திருப்பூர் குருவி சினிமா விமர்சனம்

Published on

கிரைம் திரில்லராய் வேகமெடுக்கும் திரைக்கதையில், பெண்கள் சந்திக்கும் அத்துமீறல்களை மையப்படுத்திய படைப்பு.

ஒரு தொழிற்சாலை, அதில் பணிபுரியும் நான்கு இளைஞர்கள், நான்கு இளம்பெண்களை காதலிக்கிறார்கள். அந்த நான்கு ஜோடிகளும் உற்சாகமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நான்கு பெண்களும் ஒரே தருணத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.

அந்த வன்முறையில் யாரெல்லாம் ஈடுபட்டது என்பது அந்த பெண்களுக்கே தெரியாத நிலையில், நடந்தது என்ன, யாரெல்லாம் நடத்தியது என்பதை அடையாளம் காட்டுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்.

குற்றவாளிகள் யார், அவர்கள் எப்படி சிக்குகிறார்கள், அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது கிளைமாக்ஸ்…

கதை நாயகிகளாக திருக்குறளி, தர்ஷினி, இந்து, சுபிக்‌ஷா… காதலர்களுடன் ஜாலியாக பேசி சிரித்துப் பழகும்போது அதற்கேற்ற புத்துணர்ச்சி, தங்களுக்குத் தெரியாமலே தவறு நடந்து கர்ப்பம் தரித்திருப்பதை அறியும்போது அதற்கேற்ற அதிர்ச்சி என காட்சிகளின் தேவைக்கேற்ப எளிமையான பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். நான்கு பேரில் திருக்குறளியின் மலர்ந்த புன்னகையும் உடைகளும் நடிப்பும் தனியாக தெரிகிறது.

நான்கு ஹீரோயின்களுக்கு ஜோடியாக கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் என நான்கு ஹீரோக்கள். பரவசம் பொங்க காதலிப்பது, ஆத்திரம் பொங்க குற்றவாளியைக் சுளுக்கெடுப்பது என தங்கள் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

நல்லவரா கெட்டவரா என யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் ‘அருவா சண்ட’ இசக்கிராஜாவின் பங்களிப்பு நேர்த்தி.

பெண்மை கலந்த உடல்மொழியோடு கண்களில் காமமும் சுமந்து தன் வில்லன் கேரக்டரை பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறார் பிரியராஜா.

ஜெ.கதிரின் பின்னணி இசையாலும் அரக்கோணம் யுவாவின் ஒளிப்பதிவாலும் படத்தின் தரம் கணிசமாக கூடியிருக்கிறது. பார்த்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்பது சலிப்பு தருகிறது.

பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு, திருப்பூர் தொழிற்சாலைகளில் நடக்கிற தான் கண்டறிந்த விபரீதங்களை இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமியின் திரைமொழியில் பார்க்கிறபோது மனம் கலங்குகிறது.

திருப்பூர் குருவி _ கழுகுப் பார்வை!

Rating 3 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this