HomeMovie Reviewதென் சென்னை சினிமா விமர்சனம்

தென் சென்னை சினிமா விமர்சனம்

Published on

ஆக்சன் திரில்லரில் சற்றே வித்தியாசமான கதை.

பாருடன் இணைந்த ஒரு ரெஸ்டாரென்ட், அதை கிரிக்கெட் சூதாட்டம் போன்ற முறைகேடான வழியில் குவியும் பணம் புழங்கும் இடமாக மாற்றி வைத்திருக்கும் தாதா, அந்த தாதாவுக்கே ஆப்பு வைக்க நினைக்கும் ஒரு அப்பாடக்கர் ஆசாமி. இப்படி சிக்கல்கள் சுற்றி வளைத்த நிலையில், ரெஸ்டாரெண்ட்க்கு சொந்தக்காரர் ரெஸ்டாரெண்டை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவரால் ஜெயிக்க முடிந்ததா இல்லையா என்பதே ‘தென் சென்னை’யின் கிளைமாக்ஸ்…

படத்தை தயாரித்து, இயக்கி கதைநாயகனாகவும் நடித்திருக்கிற ரங்கா மிலிட்டரியில் சேர்வதற்கானபயிற்சியில் ஈடுபடும்போது உடம்பை கடுமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரெஸ்டாரெண்டை தன் வசப்படுத்தும் முயற்சியில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்கும்போது அதற்கேற்ற முகபாவங்களை வெளிப்படுத்துவதில் பரவாயில்லை ரக நடிப்பை தந்திருக்கிறார். வசன உச்சரிப்பில் அத்தனை நிதானம் காட்டியிருக்கத் தேவையில்லை.

அழகான இருக்கும் ரியாவுக்கு வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்களைப் போல் ஹீரோவைக் காதலிப்பது, டூயட் பாடுவது என ரெகுலரான வேலைகள் இல்லை. அதற்கு பதிலாக ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க நினைக்கும் கவனிக்கத்தக்க பொறுப்பு. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

தன்னை எதிர்க்க நினைப்பவர்களை பிணமாக்கி கடலில் வீசியெறிகிற பங்களிப்பை பந்தாவாக செய்திருக்கிறார் நிதின் மேத்தா.

ஹீரோவுக்கு மாமாவாக வருகிற இளங்கோ குமணன் ஆரம்பக் காட்சிகளில் ஒரு விதமாகவும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் வேறொரு பரிமாணத்திலும் பயணித்திருக்க, வில்லனாக தன்னால் முடிந்த தெனாவட்டு காட்டியிருக்கிறார் வத்சன்.

ஆறுபாலா, சுமா உள்ளிட்டோரும் கதையோட்டத்தில் பொருந்தியிருக்கிறார்கள்.

ஜென் மார்ட்டின் பின்னணி இசையில் காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்ட, சிவ பத்மயன் ‘புது வானம் புது பூமி’ பாடலை மனதிற்கு இதம் தருகிறது. ஒளிப்பதிவில் நேர்த்தி தெரிகிறது.

சினிமாவுக்கு புதியவரான ரங்கா, வித்தியாசமான திரில்லர் கதையை ஃபேமிலி சென்டிமென்ட் கலந்து கொரோனா காலகட்டத்தில் நடப்பதாக உருவாக்கியிருக்கும் விதம் கவனம் ஈர்த்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பின் சதவிகிதம் குறைவாக இருப்பதால் படத்துக்கான மதிப்பெண்ணையும் குறைவாகவே கொடுக்க முடிகிறது.

Rating 2.5 / 5

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this