HomeCinemaதி கிராண்ட் மாஸ்டர் சினிமா விமர்சனம்

தி கிராண்ட் மாஸ்டர் சினிமா விமர்சனம்

Published on

இந்த காலத்திலும் நம்மூரில் சாதிப் பாகுபாடு தொடர்கிறது என்பதை சுட்டிக் காட்டும் படங்களின் வரிசையில் ‘தி கிராண்ட் மாஸ்டர்.’

சாதிக் கொடுமைகள் சிறுவன் நந்தனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம்; அந்த விளையாட்டில் பெரியளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவும் உண்டு. ஆனால், அவனை செஸ் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அவன் கீழ் சாதியைச் சேர்ந்தவன்; துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தின் வாரிசு.

அவனுடைய ஆசையை நிறைவேற்ற, அவனது தாய் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளால் கதை சூடு பிடிக்கிறது. நந்தன் நினைத்தபடி கிராண்ட் மாஸ்டராக முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…

நந்தனாக நடித்துள்ள மாஸ்டர் அஸ்வினின் எதார்த்தமான நடிப்பு கவர்கிறது.

சாதிவெறியர்களின் அநியாயங்களில் இருந்து ஒரு கட்டத்தில் கணவனைக் காப்பாற்ற போராடுவது, பின்னர் அதே விதமான மனநிலை கொண்ட கார்ப்பரேட் லெவலில் வில்லத்தனம் காட்டுகிற சாதி வெறியர்களால் தடுக்கப்படும் மகனுடைய திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வர மல்லுக்கட்டுவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார் அபர்ணதி.

லிங்கேஷ், சுரேஷ் மேனன் உள்ளிட்ட மற்ற அனைவரும் கதையின் தேவைக்கு குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் ஆண்டனியின் இசையும், சென்னையின் ஏழை எளிய மக்கள் வசிக்கும் குப்பத்துப் பகுதிகளை அதன் தன்மையுடன் பதிவு செய்த அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவும் படத்தை தாங்கியிருக்கின்றன.

அடித்தட்டு மக்கள் சாதிக்க நினைத்தால் அதை தடுக்க மேல் சாதியாக தங்களை நினைத்துக் கொள்கிற சமூகம், அதிகார வர்க்கம்  செய்யும் என்னவெல்லாம் செய்யும் என்பதை எதார்த்தமாகப் பதிவு செய்து, சமூகம் இன்னமும் திருந்தவில்லை என்பதை ஆத்திரத்துடன் எடுத்துச் சொல்வது படத்தின் நோக்கம். அதற்கேற்றபடி விறுவிறுப்பான திரைக்கதையமைத்து, சாதிக் கொடுமைகளுக்கு எதிராகக் கனல் பறக்கும் வசனங்களைப் படைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிச் செழியன்.

Rating 3 /5

Latest articles

அண்ணன் இளையராஜா அவர்களுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது தம்பியாய் எனக்கு மகிழ்ச்சி! -நடிகர் ராமராஜன் 

நடிகர் ராமராஜன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்த இசையின் இசை, நம் இசைஞானி என் அண்ணனின் 50 ஆண்டு...

‘இறைவி’யைவிட உணர்வுபூர்வமான கதை! -‘டோரதி’ குறித்து ப்ரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில்...

‘ஆர்எக்ஸ் 100’ கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்.’

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்....

ரசிகர்களிடம் வரவேற்பு, பத்திரிகைகளிடமிருந்து பாராட்டு… அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ படக்குழு!

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பினால்...

More like this