HomeMovie Reviewதாய் கிழவி சினிமா விமர்சனம்

தாய் கிழவி சினிமா விமர்சனம்

Published on

மண்மணத்துடன் ஒரு படம்.

அந்த தண்டட்டி கிழவி பவுனுத்தாயி வட்டிக்கு கடன் கொடுப்பதும் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையாக நடந்து கொள்வதும் வழக்கம். அதனாலேயே ஊரில் பலருக்கும் அவள் மீது வெறுப்பு. ஒரு கட்டத்தில் அவள் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்துவிட, ஊர் மக்களுக்கு ‘அப்பாடா’ என்றிருக்கிறது. மகன்களும் அவள் எப்போது போய்ச் சேருவாள் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில்தான், பவுனுத்தாயி பல பவுன் நகைகளை மறைத்து வைத்திருக்கிற ரகசியம் மகன்களுக்கு தெரிகிறது. அதுவரையிலான மனநிலை அப்படியே தலைகீழாய் மாறுகிறது. தாய் கிழவியைக் காப்பாற்றி, தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்கள். அவர்களால் கிழவியைக் காப்பாற்ற முடிந்ததா, தங்கத்தை கைப்பற்ற முடிந்ததா என்பது மீதிக் கதை… இயக்கம் சிவகுமார் முருகேசன்

ஒப்பனையால் மதுரை மாவட்ட தண்டட்டி கிழவிகளின் நகலாகவே மாறியிருக்கிற ராதிகா அகம்பாவப் பேச்சுக்களாலும், அடாவடி செயல்பாடுகளாலும், ஸ்டைலிஷ் அப்பத்தாவாக ரசிக்கத்தக்க நடவடிக்கைகளாலும், பொருத்தமான உடல் மொழியாலும் ‘பவுனுத்தாயி’க்கு  உயிரூட்டியிருக்கிறார். தங்கத்தை மறைத்து வைத்ததுபோல் பாசத்தையும் மறைத்து வைத்திருக்கும் அந்த தாய் கிழவி, கிளைமாக்ஸில் தான் ஏன் அப்படியொரு அராஜகப் பேர்வழியாக இருக்கிறேன் என்பதற்கு கொடுக்கும் விளக்கமும் சரி, சேமிப்பின் அவசியம், பெண் சுதந்திரம் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்வதும் சரி அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

தாய் கிழவியின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், மகளாக ரேச்சல் ரெபேக்கா, மருமகனாக முத்துக்குமார், மற்ற முக்கியமான கேரக்டர்களில் முனீஸ்காந்த், இளவரசு என படம் முழுக்க ஏராளமான நடிகர் நடிகைகள். ஒருவர் கூட வீணடிக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கவர்கிறார்கள்.  அவர்கள் மூலம் ஆடியன்ஸுக்கு கடத்தப்படும் வாழ்வியல் யதார்த்தங்கள் ஆழமானவை, அழுத்தமானவை.

காட்சிகளின் தன்மைக்கேற்ப பின்னணி இசையமைத்திருக்கும் நிவாஸ் கே பிரசன்னா, ஜெகன் கவிராஜ், கருமாத்தூர் மணிமாறன் இருவரது வரிகளையும் இனிய பாடல்களாக்கி மனதில் தங்க வைக்கிறார். விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு கதைக்களத்தை தாங்கும் தூண்களில் ஒன்றாகியிருக்கிறது.

‘சிரிக்கலாம், ரசிக்கலாம்’ ரக பொழுதுபோக்கு படைப்புதான் என்றாலும், அதன் மூலம் சொல்லியிருக்கிற கருத்துக்களால் படத்தை சமூகத்திற்கான பாடமாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்!

Rating 3.5 / 5 

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this