HomeMovie ReviewTAROT சினிமா விமர்சனம்

TAROT சினிமா விமர்சனம்

Published on

மிரட்டலான ஹாரர் அனுபவம் தரும் படங்களின் வரிசையில் நிஜமாகவே வித்தியாசமான கதையோடு வந்திருக்கிற படம்.

கல்லூரி நண்பர்கள் சிலர் ஆர்வமாக கார்டு விளையாடுகிறார்கள். தீயில் போட்டால்கூட எரியாத, தீயசக்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த கார்டுகளில் இருக்கிற பேயின் உருவம் நிஜத்தில் தோன்றுகிறது. விளையாடுகிற ஒவ்வொருவரையும் கொல்கிறது. பேய்கள் வெவ்வேறு தோற்றங்களில் இருப்பதும் கொலை செய்வதில் இருக்கும் கொடூரமும் மிரட்டலாக இருக்கிறது.

அப்படியான நிகழ்வுகளால் கதையில் விறுவிறுபு உருவாக, பேய்களிடமிருந்து தப்பிக்க அந்த நண்பர்கள் எடுத்துக் கொள்கிற முயற்சியும் அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களுமே அடுத்தடுத்த காட்சிகள்… யாரெல்லாம் உயிர் பிழைத்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.

1992-ல் நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் Spenser Cohen and Anna Halberg.

ஜோசப் பிஸ்ராவின் பின்னணி இசை திகில் காட்சிகளுக்கு கூடுதல் சுறுசுறுப்பு சேர்க்க, லி ஸ்மோல்கினின் ஒளிப்பதிவும் Harriet Slater, Adain Bradley, Avantika, Wolfgang Novogratz, Humberly González, Larsen Thompson and Jacob Batalon என நடிகர்கள், நடிகைகளின் தேர்ந்த நடிப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.

Avantika Vandanapu “Paige” in Screen Gems TAROT

நண்பர்கள் குழுவில் ஒருவராக வருகிற அவந்திகா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவருபவர். அவரது இளமை ததும்பும் அழகும் துடிப்பான நடிப்பும் மனதுக்குள் நிறைகிறது.

Tarot – திகில் பட விரும்பிகளை கண்டிப்பாக திருப்திபடுத்தும்.

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this