HomeCinemaஆதிராஜன் இயக்கத்தில் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா நடிக்கும் 'தீராப்பகை' படத்தில் மேக்னாவின் குத்தாட்டம்!

ஆதிராஜன் இயக்கத்தில் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா நடிக்கும் ‘தீராப்பகை’ படத்தில் மேக்னாவின் குத்தாட்டம்!

Published on

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’, இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா கதாநாயகனாக நடிக்கும் ‘தீராப்பகை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தேசிய விருது பெற்ற விஜயராகவேந்த்ரா தமிழில் ‘கேஸ் நம்பர் 13’, ‘ஜோக் 101’ உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமாண்டமான பார் செட்டில் படமாக்கப்பட்டுள்ள சரக்கு பாடலுக்கு பிரபல நடிகை மேக்னா நாயுடு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “சென்னை, பெங்களூர், கோவை, என பல இடங்களில் ஒரே மாதிரியான முறையில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இது கொலையா, தற்கொலையா அல்லது அமானுஷ்ய விஷயமா என்ற முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறது காவல் துறை. விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிர்ச்சியூட்டும் மர்மம் அவிழ்கிறது. அதீத சுதந்திரத்தாலும் நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டுவதை கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது. அதேபோல சுவாரஸ்யமான காதல் காட்சிகளும்
இந்தப் படத்தின் பலம். படப்பிடிப்புக்கு ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூர், மைசூர், கோவா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும்” என்றார்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

படக்குழு:-

தயாரிப்பு: கோல்டன் மேஜிக் கிரியேட்டர்’ டி. ஆதிராஜன்

இணை தயாரிப்பு: ஏ. சூர்யா

‘சிலந்தி’ மற்றும் சில தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்த எம்.ஜி. கார்த்திக், ஆதிராஜனுடன் மீண்டும் இணைந்து பின்னணி இசையமைப்பிலும் பாடல்களிலும் மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.

பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராஜேஷ் கே நாராயண் மாறுபட்ட கோணங்களில் மிரட்டியிருக்கிறார்.

‘கேஜிஎஃப்’ புகழ் எடிட்டர் ஸ்ரீகாந்த் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கிறார்.

ஐ.ராதிகா மற்றும் கலைகுமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

பிரபாஸின் கல்கி 2898′ மோகன்லாலின் ‘மரைக்காயர்’ உட்பட பல பிரமாண்டமான படங்களுக்கு சவுண்ட் டிஸைன் செய்த எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங்கை கையாள்கிறார்.

பாடல் வரிகளை சினேகன் மற்றும் ஆதிராஜன் எழுதியுள்ளனர்.

மக்கள் தொடர்பு: AIM சதீஷ்

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this