HomeGeneralடைட்டானிக் சினிமா விமர்சனம்

டைட்டானிக் சினிமா விமர்சனம்

Published on

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று பேர்.

இப்படியொரு ஒன்லைனை எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை அமைக்கலாம். இயக்குநர் எம் ஜானகிராமன் காமெடி கலாட்டாக்களுடன் சுவாரஸ்யப்படுத்த முயற்சி செய்துள்ளார்.

ஒரு பெண் ஆனந்தி. அவர் வாழ்க்கையில் சந்திக்கிற மூன்று பேர் கலையரசன், ராகவ் விஜய், காளி வெங்கட்.

நாயகி ஆனந்தியை பள்ளிப் பருவத்தில் காதலிக்கிறார் காளி வெங்கட். ஆனந்தி அந்த காதலை எதிர்க்காமல் அவருடன் நன்றாகப் பேசிப் பழகி நாட்களைக் கடத்துகிறார். காளி வெங்கட் ‘கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்’ என்று சபதமெல்லாம் எடுக்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாத ஆனந்தி அவரை உதறிவிட்டு, கல்லூரிப் படிப்புக்கு போகிறார். அங்கு சக மாணவன் கலையரசன் ஆனந்தியைக் காதலிக்க, ஆனந்தியும் இதயத்தைப் பறிகொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அதையெல்லாம் மறைத்து, வேறு ஒருவரை கணவராக ஏற்கத் தயாராகிறார். ஆனந்திக்கு கணவராகப் போகிறவர் ஒரு பெண்ணைக் காதலித்து பிரேக் அப் ஆகியிருக்கிறது. அதை அவரும் மறைத்து ஆனந்தியைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராகியிருக்கிறார்.

ஆனந்தி, அவரைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறவர், அவரின் முன்னாள் காதலி, ஆனந்தியின் முன்னாள் காதலர்கள் இரண்டு பேர் என எல்லோரும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் சந்திக்கிறார்கள்.

அந்த சந்திப்புக்கான வாய்ப்பு எப்படியெல்லாம் உருவாகிறது என்பதும், சந்திப்புக்கு பின் என்ன நடக்கிறது என்பதும்தான் திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்…

பள்ளிப் பருவ காதலை எதிர்கொள்ளும் விதம், கல்லூரிப் பருவ காதலில் அந்த வயதுக்கே உரிய துடிப்பை வெளிப்படுத்தும் விதம், திருமணத்துக்கு தயாராகும் விதம் என ஒவ்வொரு காட்சியிலும் கவர்கிறார்.

கலையரசன் ஆனந்தியைக் காதலிப்பது, அவரைப் பிரிந்து ஐந்தாறு ஆண்டுகள் கழித்து மீண்டும் தேடிக் கண்டுபிடிப்பது என கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

ராகவ் விஜய்க்கும் ஆஷ்னா ஜாவேரிக்குமான காதல் மோதல் அசத்தல் ரகம்.

23 வயதில் பத்தாம் வகுப்பு படிக்கிற மாணவனாக வந்து ஆனந்தியைக் காதலிக்கிற காளி வெங்கட் கலகலப்புக்கு உதவுகிறார்.

ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்றவர்கள் கச்சிதமாக நடித்திருக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையில் சிலம்பரசன் டி ஆர் பாடியுள்ள கொக்கா மக்கா பாடல் வைப் மூடுக்கு கொண்டு போகிறது. ஒளிப்பதிவு நேர்த்தி.

ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் மூன்று பேர், அவர்களின் உரையாடல்கள் வழியாக விரியும் காட்சிகள் என பயணிக்கும் படம் ஃபீல் குட் உணர்வைத் தருகிறது.

காதலில் தோற்றவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுபவதாக காண்பித்த படங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். இந்த படத்தில் காதலில் தோல்வி கண்டவர்கள் அடுத்த காதல், கல்யாணம் என வேகமெடுக்கிறார்கள். அதை நல்ல முன்னுதாரணமாக கருதலாம். பெரிய எதிர்பார்ப்புகளில்லாமல் போனால் ஜாலியாக பார்த்து விட்டு வரலாம்.

Rating 3 / 5

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

More like this

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...