HomeMovie Reviewஃபிளாக் சினிமா விமர்சனம்

ஃபிளாக் சினிமா விமர்சனம்

Published on

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன்.

அப்படியென்ன தாத்தாவின் கனவு?

டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது நேரில் பார்க்க வேண்டும்.

வித்தியாசமான கனவாக இருக்கிறதே. அந்த கனவுக்கு ஏதேனும் ஸ்பெஷல் ரீசன் இருக்கிறதா?

ஜனாதிபதி ஏற்றப் போகும் கொடி அவர் தயாரித்தது.

தாத்தாவின் கனவுக்காக பேரன் ஏன் இந்தியா முழுக்க பயணிக்கிறான்?

தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது; அவரது கனவை நனவாக்க அவர் பார்க்க விரும்புகிற காட்சியை தான் பார்க்க புறப்படுகிறான்; யாருடைய துணையுமில்லாமல் செலவுக்கு போதுமான பணமும் இல்லாமல் கிளம்பி, எப்படிப் போவது என புரியாமல் தெரியாமல் கன்னாபின்னாவென அலைந்ததில் இந்தியா முழுவதும் ஒரு சுற்றி சுற்றிவிடுகிறான்.

எல்லாம் சரி, கொடியேற்றத்தை, கொடி பறப்பதை பார்த்தானா இல்லையா?

அதுதான் கிளைமாக்ஸ்

படத்தின் ஹீரோ சிறுவன் திஹான். பெரியவர்கள் செய்வதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் பாசம், சோகம், தவிப்பு, பயம், பதட்டம், உற்சாகம் என உணர்வுகளைக் கலந்து குழந்தைத்தனத்துடன் செய்திருப்பது மனதைக் கொள்ளையடிக்கிறது.

தாத்தாவாக மிக்கி மக்கி ஜா. அப்பா அம்மாவை இழந்து நிற்கும் பேரனுக்கு ஆறுதல் சொல்லி அரவணைப்பதும் தன் கனவை அவன் மனதில் புகுத்துவதுமாக சிம்பிளான பங்களிப்பு. அதை சரியாகச் செய்திருக்கிறார்.

கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி என மற்றவர்களின் எளிமையான நடிப்பு,

ராஜா ரவி வர்மா -பாலசுப்பிரமணியம் ஆகியோரின் கச்சிதமான பின்னணி இசை,

இயக்குநர் பொன்சங்கரின் இந்தியாவின் மாநிலங்களை பண்பாட்டு அடையாளங்களோடு வளைத்துச் சுருட்டியிருக்கும் பிரமாண்டமான ஒளிப்பதிவு படத்தின் பலம்.

மசாலா படங்களில் இருக்கிற கமர்சியல் அம்சங்கள் இதில் கிடையாது. ஒரு பெரியவருக்கு இருக்கிற தேசியக் கொடி மீதான ஈடுபாட்டை மையப்படுத்திய கதையில் சுழலும் இந்த படம், ‘இப்படி கூட நாட்டுப் பற்றைத் தூண்ட முடியுமா?’ என ஆச்சரியப்பட வைக்கும். அந்த ஆச்சரியத்தை உணர விரும்பினால் உங்கள் பிள்ளைகளுடன் தியேட்டருக்கு கிளம்பலாம்.

Rating 3 / 5 

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

‘யானைமரம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான சேரன், ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'யானைமரம்' படத்தின் டிரைலரை பார்த்து,...

More like this