HomeGeneralஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ்வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் 'து மில் ஜாயே.'

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ்வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் ‘து மில் ஜாயே.’

Published on

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் இந்தப் பாடலின் ஹுக் ஸ்டெப்பை ரசிகர்கள் பலரும் ரீல்ஸ்களாக உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.
‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், இருவரின் அசத்தலான கெமிஸ்ட்ரி, மனதை வருடும் இசை மற்றும் கண்கவர் காட்சிகள் ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இருவரும் மீண்டும் இணைந்து திரையில் தோன்றுவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதால், ‘கிங்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷாருக்கானை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

More like this