HomeGeneral'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்திருக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் டீசர் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

Published on

நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா- சுதாகர் செருகூரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் தயாரான ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது
‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான ‘தி பாரடைஸ்’- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான ‘ஆயா ஷேர்’ … என  இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். ‘நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசர் – அடக்குமுறை மற்றும் வன்முறையால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கொடூரமான உலகில் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது. இந்த இருளுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களின் உரத்த குரலாகவும்…. சக்தி வாய்ந்தவர்களுக்கு கெட்ட கனவாகவும் மாறும் ஒரு அச்சமற்ற புரட்சியாளரான ஜடல் எழுகிறார். ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி- கோபம் மற்றும் நோக்கத்தால் நிரம்பி இருப்பதால்… இந்த மோதல் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தோன்றுகிறது.
இந்த டீசரை தனித்துவமாக காட்சிப்படுத்துவது… அதன் காட்சி ரீதியிலான கதை சொல்லல்தான். மீண்டும் மீண்டும் இடம்பெறும் காகத்தின் உருவம்…. பல தலைமுறைகளாக ஓரங்கட்டப்பட்டவர்களை குறிக்கிறது. இந்த குறியீடு – படத்தின் அதிரடி நிறைந்த கதைக்கு கச்சிதமாக பொருந்துவதுடன்.. உணர்வு பூர்வமான ஆழத்துடனும் இணைக்கிறது.
சண்டைக் காட்சிகள்-  பிரமிக்க வைக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமான கோடாரி மோதல் …ஒரு அதி திவீரமான சிறை சண்டை …. கொடூரமான வாள் சண்டை …. எலும்பும் முறியும் அளவுக்கு கைகலப்பு… கொழுந்து விட்டு எரியும் வெடிப்புகள்…. ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சியில் ஒன்றாக அணிவகுத்து செல்வது…. என ஒவ்வொரு காட்சியும் இயல்பாகவும், தயக்கமின்றியும் பிரம்மாண்டமாக உணரப்படுகிறது. இந்த டீசர் ஒருபோதும் தனது வேகத்தை இழக்காமல் ..மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களை தொடர்ந்து வழங்குகிறது.
நானியை அடையாளம் காணவே முடியவில்லை. மிரட்டலான தோற்ற மாற்றத்துடன் ஈடு இணையற்ற தீவிரத்தை வெளிப்படுத்தி.. அவர் அந்த கதாபாத்திரத்துடன் முழுதாக ஒன்றி விடுகிறார். அவரது தனித்துவமான சக்தி வாய்ந்த வசன உச்சரிப்பு … கம்பீரமான உடல் மொழி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு.. ஆகியவை கதையில் முழுமையான ஈடுபாட்டை ஏற்படுத்துகின்றன.
இவருடன் மோகன் பாபு, ராகவ் ஜூயல், கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றன.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் பிரம்மாண்டமான படைப்பு பாணி தான் அனைத்து வித்தியாசங்களையும் உண்டாக்குகிறது. ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சியின் ஆழத்தையும், பிரம்மாண்டத்தையும், சமநிலைப்படுத்தி இருப்பது… ஒரு திரைப்பட இயக்குநராக அவரது படைப்பு சார்ந்த நம்பிக்கையை எதிரொலிக்கிறது. அதிகப்படியான விளக்கங்களை சார்ந்திருக்காமலேயே இப்படத்தின் பின்னணியில் உள்ள மிகப்பெரும் லட்சியத்தை… இந்த டீசர் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள் தான். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா ஒரு யதார்த்தமான மற்றும் அழுத்தமான உலகத்தை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சி ஹெச் சாய் அதனை தனித்துவமான காட்சி அமைப்பு மற்றும் கோணங்களுடன் பிரமிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக அனிருத்தின் அதிரடி பின்னணி இசை தனித்து நிற்கிறது. ஒரு வித மர்மமான ஒலியுடன் தொடங்கி… பின்னர் ஒவ்வொரு காட்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும்…. இதயத்துடிப்பை அதிகரிக்கும் வகையிலும் இசை.. பெருவெளியாக மாற்றம் பெறுகிறது. எஸ் எல் வி சினிமாஸ் SLV Cinemas நிறுவனத்தின் சமரசமற்ற தயாரிப்பு அணுகுமுறையால் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ திரைப்படம் – பெரிய திரைக்கு ஏற்ற ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக திகழ்கிறது.
இந்த அதிரடி டீசர் மூலம் படக்குழுவினர் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் புயலாக வீசப்போவதையும் அறிவித்துள்ளனர்.

Latest articles

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் விரியும் ‘மூடர் கூடம் 2’

கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான...

டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் – மீண்டும் இணையும் ‘குப்பி’ டீம்!

மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள...

குட் நைட், லவ்வர், குடும்பஸ்தனுக்கு பிறகு மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்.’ பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகிறது.

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில்...

More like this

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் விரியும் ‘மூடர் கூடம் 2’

கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான...

டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் – மீண்டும் இணையும் ‘குப்பி’ டீம்!

மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள...