HomeGeneral’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு...ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

Published on

விரைவில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலகளவில் இசைத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோனி மியூசிக் மற்றும் ‘டெக்சாஸ் டைகர்’ படத்தின் இளம் குழுவினர் இணைந்துள்ளது இந்த படத்தின் உள்ளடக்கம், இசை மற்றும் வணிக ரீதியான வியாபாரம் என திரையுலகினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோகம் மற்றும் வலுவான புரோமோஷன்ஸ் மூலம், படம் அதிகளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி. இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ’டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இசை உலகில் மறக்க முடியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற படைப்புகளின் இல்லமாக சோனி மியூசிக் திகழ்கிறது. அத்தகைய மதிப்புமிக்க சர்வதேச நிறுவனத்துடன் எங்கள் படம் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.
பொழுதுபோக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதையம்சத்துடன் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் முழுமையான திரையரங்கு அனுபவமாக ‘டெக்சாஸ் டைகர்’ உருவாகி வருகிறது.
படத்தின் இசை, வெளியீட்டு விவரங்கள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this