HomeGeneralசாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் டேனியல் ஆனி போப், வையாபுரி, சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சக்திவேல் எழுதி, இயக்கி இருக்கிறார்.
வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் டி.எஃப்.டி. ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, பி.கே. படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். கலை இயக்குநராக பிரசாத் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ராஜா எழுதியுள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அந்த சம்பவத்தில் சிக்கும் மூன்று பேர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லர் ஜானரில் பேசும் படமாக தீயோர் கூடம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தீயோர் கூடம் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை சாக்ஷி அகர்வால் முன் உடைந்த கண்ணாடிகளில் டேனில் ஆனி போப், வையாபுரி முகங்கள் இடம்பெற்று இருக்கிறது. போஸ்டரில் மர்மம், விசாரணை மற்றும் மனதை குழப்பும் சந்தேகங்களுக்கு விடை தேடும் கதையை தீயோர் கூடம் வித்தியாசமாக சொல்லும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் இந்தப் படம் குறித்த இதர அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this