HomeCinemaவித்தியாசமான கல்ட் சினிமாவாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து' சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி...

வித்தியாசமான கல்ட் சினிமாவாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்.’

தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அவருடன் ‘ஜெயிலர்’ ஹர்ஷத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு அவரது சகோதரர் பிரேம்ஜி இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்தை பற்றி சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசுகையில், ” ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் ‘தி பாய்ஸ்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.‌ படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்” என்றார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் இந்த படம் வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் கல்ட் சினிமா என்பது தெரிகிறது. அதனால் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இளைய தலைமுறையினரிடத்திலும், இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த திரைப்படத்தை நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் E. செந்தில்குமார் தயாரித்திருக்கிறார். இவருடன் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் அவருடைய சொந்த பட நிறுவனமான டார்க் ரூம் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்.

படக்குழு:-
அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.‌

Latest articles

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

More like this