HomeCinemaயாஷ் பிறந்தநாளில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்பட முன்னோட்டம்!

யாஷ் பிறந்தநாளில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்பட முன்னோட்டம்!

Published on

யாஷ் பிறந்தநாளில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்பட முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அதில் கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.

யாஷ் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா – ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.

அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.

ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்… அசைக்க முடியாத உறுதியுடனும்… முழுமையான கட்டுப்பாடுடனும்… ஒரு துப்பாக்கியுடன் அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை, அதை தன்வசப்படுத்துகிறார்.

அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல… அவர் நோக்கம் – தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.

அதன் முதல் காட்சியிலிருந்து’ டாக்ஸிக்’ ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.

இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது!

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this