HomeCinemaபிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ்!

பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ்!

Published on

மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில், உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வெஞ்சராக உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஷுவல் ரொமான்ஸ் தயாரிப்பில், தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கியுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்காபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி கையாண்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். தரமான தயாரிப்பு, அழகியல் கூறுகள், கதைசொல்லல், மற்றும் நடிகர்களின் நடிப்புத் திறமை ஆகியவற்றை இந்தப் படம் தரமாக வெளிப்படுத்த இருக்கிறது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அசத்தலான நடிப்பு மற்றும் ஆன்மாவைத் தூண்டும் பின்னணி இசை ஆகியவற்றுடன் படம் பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க உள்ளது.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.

உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இந்தியப் படம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் நிச்சயம் எதேனும் ஒரு புள்ளியில் இந்தப் படத்தின் கதையைத் தங்களோடு இணைத்துப் பார்ப்பார்கள். அப்படியான கதையை உண்மைத் தன்மை மாறாமல் சினிமாவாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால். இந்த நாவல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஒருவருக்கு நம்ப முடியாத ஒன்று நடந்ததை ஒவ்வொரு கணத்திலும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்க விரும்புகிறேன். புனைவு கதைகளை விட உண்மை ஒருபோதும் விசித்திரமாக இருந்ததில்லை. கதை சொல்லும் உண்மைத் தன்மையின் பிரம்மாண்டம் திரையரங்குகளில் பார்வையாளர்கள் படம் பார்க்கும் போது தெரிய வரும். இந்த மாபெரும் படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this