HomeCinemaரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் ஃபேண்டஸி திரைப்படத்தின்...

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் ஃபேண்டஸி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

Published on

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப்’ பான் இந்திய பிரமாண்ட திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்யம், திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாக நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இந்த படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரமாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.

₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this